சாங்கி விமான நிலையத்தில் 2 வெளிநாட்டு ஊழியர்கள் மோதல் – ஒருவருக்கு 11 வாரம் சிறை

Published: 15 Nov 2026, 11:39 AM |
foreign workers-fight-changi-airport-jail

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஓர் உணவகத்தில் வெளிநாட்டு ஊழியர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு 11 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி ஓர் உணவகத்தில் இரவு நேரத்தில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

சாங்கி விமான நிலையத்தின் முனையம் 3-ல் உள்ள ஓர் உணவகத்தில் வேலை பார்த்த தாய்லாந்தை சேர்ந்த இரு பெண் ஊழியர்களிடையே இந்த சண்டை மூண்டது.

35 வயதான சாங்சுவன் திதிரட் மற்றும் 53 வயதான சரோயன்சுக் கிரித்யா என்ற இருவரும் ஒரே உணவகத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர்.

இருவருக்கும் இடையே நிலவிய புரிதல் வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

அன்றிரவு கிட்டத்தட்ட 9 மணி வாக்கில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அது கைகலப்பாக மாறியது.

53 வயதான சரோயன்சுக், சாங்சுவனை தள்ளிவிட்டதில் கீழே இருந்த உலோக ஸ்டூலில் அவர் மோதி விழுந்துள்ளார். இதனால் அவரின் இடது பக்க விலா எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

சக ஊழியர் தடுத்தும் இருவருக்கும் இடையே மீண்டும் இந்த சண்டை ஓயாமல் தொடர்ந்துள்ளது, இடையில் சரோயன்சுக் கரண்டியை விட்டு வீசி எறிந்துள்ளார்.

பதிலுக்கு சாங்சுவன் கையில் வைத்திருந்த கத்தரிக்கோலை வைத்து சரோயன்சுக் கையில் இரு முறை குத்தியுள்ளார்.

காயமடைந்த சரோயன்சுக் பின்னர் சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

புகார்

இதுகுறித்து உணவக மேலாளர் போலீசில் புகார் அளிக்க, சம்பவம் நடந்த தினமே சாங்சுவன் கைது செய்யப்பட்டார்.

ஆபத்தான ஆயுதம் கொண்டு தாக்கி காயம் விளைவித்த குற்றச் செயலுக்காக சாங்சுவனுக்கு 11 வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மிரட்டல் விடுத்தது மற்றும் கடுமையாக காயம் ஏற்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் சரோயன்சுக் மீது உள்ளன. இவரின் வழக்கு நிலுவையில் உள்ளது.

சிங்கப்பூர் பேருந்துகளில் புதிய விதிகள்: சத்தமாக ஆடியோ, உண்பது உள்ளிட்ட செயல்களுக்கு $500 அபராதம்

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உடனே துல்லியமாக தெரிந்துகொள்ள சிங்கை தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்…

Photo: Nowboarding.changiairport.com

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.