திருச்சி–சிங்கப்பூர் விமானத்தில் திடீர் கோளாறு: அவசரமாக சென்னையில் தரையிறக்கம்

Published: 9 Sep 2026, 2:39 PM |
Trichy Airport

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழிற்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 180 க்கு மேற்பட்டோர் பத்திரமாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நேற்று முன்தினம் திங்கள்கிழமை (செப்.7) திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற IX682 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது இந்த கோளாறு கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து, விமானி திருச்சி விமான நிலைய கட்டுப்பட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், அன்று மாலை 5.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் தேவையான அனைத்து அவசரகால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

இதனை அடுத்து, விமானம் அன்று மாலை கிட்டத்தட்ட 5.50 மணியளவில் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

விமானத்தில் இருந்தவர்களுக்கு எந்தவித அசம்பாவிதங்களோ காயங்களோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

பயணிகள் வேறு விமானத்தில் சிங்கப்பூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னர் நடந்த சம்பவத்தில், திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானிலேயே 4 மணிநேரம் வட்டம் அடித்ததால் பயணிகள் பீதியில் உறைந்தனர்.

சிங்கப்பூர் தொடர்புடைய இந்திய செய்திகள் பற்றி துல்லியமாக அறிந்துகொள்ள இணைந்திருங்கள்…

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.