திருச்சி-சிங்கப்பூர் விமானத்தில் திடீர் கோளாறு.. 4 மணி நேரம் வட்டமடித்த விமானம் – பயணிகள் பீதி

Published: 22 Aug 2026, 4:41 PM |

திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானிலேயே 4 மணிநேரம் வட்டம் அடித்ததால் பயணிகள் பீதியில் உறைந்தனர்.

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று மாலை 6:40 மணிக்கு சுமார் 127 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் வானில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதன் இன்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர்.

அதன் பின்னர் அவர்கள், திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். விமானத்தின் எரிபொருள் அதிக அளவில் இருப்பதால் அவசரமாக தரையிறக்குவது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த விமானிகள் விமானத்தின் எடையை குறைக்க முடிவு செய்தனர்.

விமான நிலைய அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, திருச்சி பகுதியின் வானிலேயே விமானம் வட்டமடித்து எரிபொருளை படிப்படியாக குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக விமானம் வானிலையே வட்டமடித்துக் கொண்டிருந்ததால் பயணிகளுக்கு சிறிய கலக்கம் ஏற்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட அச்சத்தை போக்க விமான பணியாளர்கள் பயணிகளுக்கு தைரியத்தை வழங்கி அவர்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தனர்.

அதே நேரத்தில், திருச்சி விமான நிலையத்திலும் விமானம் தரையிறங்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

பின்னர் எரிபொருள் பாதுகாப்பு அளவை எட்டியதும் விமானம் பாதுகாப்பாக மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. இதனை அடுத்து, பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

துரிதமாக செயல்பட்டு ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் தடுத்த விமானிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.