ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய Singpass Passkey வசதி அறிமுகம் : செப்.9 முதல்

Published: 9 Sep 2026, 5:30 PM |
Singpass passkey

சிங்கப்பூரில் Singpass பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இன்று (செப்.9) முதல் Passkey மூலம் login செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதலில் இந்த Passkey வசதி ஐபோன் (iOS) பயனர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், படிப்படியாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்த சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.

எப்படி பெறுவது?

இந்த Passkey வசதியை பெற ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் கைபேசியில் Singpass செயலியை சமீபத்திய version க்கு அப்டேட் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யும்போது, Singpass செயலி மூலம் பயனர்களுக்கு Passkey வசதி தொடர்பான notification தகவல் அனுப்பப்படும், அவற்றை பயன்படுத்தி Passkey-யை உருவாக்கி கொள்ளலாம்.

Passkey முறையை பின்பற்றி நாம் login செய்யும்போது அதற்கு கடவுச்சொல் அல்லது OTP எண்கள் தேவைப்படாது.

இதனால் மோசடியான இணைய வலைகளில் நாம் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.

கைபேசி தொலைந்தால்?

Singpass பயனர்களின் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு கைபேசி தொலைந்துபோனால், மற்றொரு கைபேசியில் Singpass கணக்கை உள்ளீடு செய்யும்போது பழைய கைபேசியில் இருந்த Singpass செயலி மற்றும் அது தொடர்புடைய Passkey ஆகியவை தானாகவே செயலிழந்துவிடும்.

Passkey என்பது கூடுதல் login அம்சம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தற்போது பயன்பாட்டில் உள்ள QR login, முக சரிபார்ப்பு (Face Verification) மற்றும் SMS செய்தி வழி OTP ஆகியவை தொடர்ந்து கிடைக்கப்பெறும்.

சிங்கப்பூரில் மின்-தூண்டிலிடல் (phishing) மோசடி பெரும் பிரச்சனையாக இருந்து வரும் நிலையில் Singpass பயனர்களின் login தகவல்களை பாதுகாக்கும் அரணாக Passkey அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட் (Work Permit) வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் Singpass கணக்குகளை ஏமாற்றி பெற்றதாக 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Singpass தொடர்புடைய செய்திகளை பற்றி அறிய தொடர்ந்து இணைப்பில் இருங்கள்.

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.