“Return Right” இயந்திரத்தில் மோசடி செய்த வெளிநாட்டு ஊழியர் – எச்சரித்த BCRS

Published: 13 Nov 2026, 11:37 PM |
Return Right Worker BCRS warn

சிங்கப்பூரில் “Return Right” இயந்திரத்தை வெளிநாட்டு ஊழியர் ஒருவர் முறைகேடாக பயன்படுத்தும் காணொளி இணையத்தில் தீயாக பரவியது.

அதாவது, ஒரு கேனை மீண்டும் மீண்டும் ஸ்கேன் செய்துவிட்டு மற்ற கேன்களை இயந்திரத்தில் போட்டு பணத்தை பெறுவது போன்ற காணொளி Facebook மற்றும் Tiktok வலைத்தளங்களில் பரவியது, இதனால் அதன்செயல்பாடுகள் குறித்த பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டன.

தீவீரமாக கண்காணிப்படும்

இந்நிலையில், இதுபோன்ற முறைகேடான செயல்கள் தீவீரமாக கண்காணிப்படும் என்று பானக் கொள்கலன் திரும்பப் பெறும் திட்ட (BCRS) அமைப்பு கூறியுள்ளது.

இது குறித்து BCRS திட்ட அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தகுதியான பான கொள்கலன்களுக்கு மட்டுமே 10 சென்ட் வழங்கப்படும் என்றார்.

வேண்டுமென்றே இயந்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி பணம் பெறுவது தீவீரமாக எடுத்துக்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

அதே போல, Return Right இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவோரை தீவீரமாக பார்ப்பதாக கூறிய தேசிய சுற்றுப்புற அமைப்பு (NEA) அதன் நம்பகத்தன்மையை பாதுகாக்கவும், முறைகேட்டை தடுக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க BCRS அமைப்பை வலியுறுத்தியது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

Return Right இயந்திர முறைகேட்டை தடுக்க பலவகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைப்பு கூறியுள்ளது. அதாவது,

  • டிஜிட்டல் பரிவர்த்தனை பதிவுகள்
  • 24 மணிநேர CCTV வீடியோ கண்காணிப்பு
  • மோசடியை கண்டறியும் தொழில்நுட்பம்
  • மோசடி தொடர்பான பரிவர்த்தனையை தொடர்புடைய அதிகாரிகளுக்கு பரிந்துரைப்பது

இந்த BCRS திட்டம் என்றால் என்ன?

சிங்கப்பூரில் அக்.1 முதல் புதிய விதி: Return Right Logo இல்லா drinks விற்பனைக்கு தடை – 10 சென்ட் டெபாசிட் என்பது என்ன?

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.