சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு 8 லட்சம் பணத்துடன் செல்லவிருந்த பயணி ஒருவரை தடுத்து வைத்த விமான நிலைய அதிகாரிகள், பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
நேற்று (நவ.11) முன்தினம் சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அர்ச்சனா என்ற 32 வயதுமிக்க பெண் சிங்கப்பூர் செல்லவிருந்தார்.
இந்நிலையில், விமான நிலைய அதிகாரிகள் பெண்ணின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது உள்ளே கட்டு கட்டாக இருந்த பணத்தை அதிகாரிகள் கண்டனர்.
அது குறித்து அவரிடம் விசாரித்தபோது, அதில் வெறும் 20,000 பணம் மட்டுமே கை செலவுக்காக இருப்பதாக அதிகாரிகளிடம் கூறினார்.
அதை எடுத்து பார்த்தபோது 8 லட்சம் பணம் இருந்தது அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
இந்திய பயணிகள் அவசர தேவைக்காக வேண்டி கையில் ரூ.25,000 வரை பணம் எடுத்து செல்லலாம். அதையும் மறைவாக எடுத்து செல்லக்கூடாது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அர்ச்சனாவிடம் அளவுக்கு அதிகமான பணம் இருந்ததால் அவர் பிடித்து வைக்கப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவரின் பயணமும் ரத்து செய்யப்பட்டது.
இது குறித்த விசாரணை நடந்து வருகிறது.
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த 39 வயது நபர் கைது
சிங்கப்பூரில் பணிபுரிந்த இந்தியர்.. தீபாவளிக்காக சொந்த ஊர் சென்ற நிலையில் உயிரிழப்பு – கொலை என தகவல்
Photo: Pexels