சிங்கப்பூரில் தமிழ் ஊழியரின் பர்ஸை காணவில்லை – Work Permit, நகை சீட்டு, $1,900 ரொக்கம் இருந்ததாக தகவல்

Published: 12 Nov 2026, 10:41 PM |
Wallet Work Permit Missing

சிங்கப்பூரில் வேலை செய்துவரும் தமிழ் ஊழியரின் முக்கிய ஆவணங்கள் மற்றும் $1,900 ரொக்கம் அடங்கிய பர்ஸை காணவில்லை என்று சிங்கை தமிழ் தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

லிட்டில் இந்தியாவின் தேக்கா பகுதியில் ஆடை எடுக்க சென்றபோது சக்கரபாணி செல்வராஜ் என்பவரின் பர்ஸ் தொலைந்ததாக கூறப்பட்டுள்ளது.

அதில் Work Permit அட்டை, லைசென்ஸ், ATM உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும், $1,900 வெள்ளி ரொக்க பணமும், நகை சீட்டு மேலும் குடும்ப புகைப்படங்களும் இருந்ததாக வாசகர் நவீன் குமார் சிங்கை தமிழ் தளத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.

முக்கிய ஆவணங்கள் இருப்பதால் தொடர்ந்து தேடி வருவதாகவும் கிடைத்தால் தகவல் தெரிவிக்கும்படியும் தயவுகூர்ந்து கேட்டுக்கொண்டுள்ளார்.

யாரேனும் எடுத்து இருந்தாலோ அல்லது இனிமேல் கண்டெடுத்தாலோ உரிவரிடம் தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

சக்கரபாணி செல்வராஜ் “TNC ஜெனரல் கன்ஸ்ட்ரக்சன்” நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

பர்ஸ் கிடைத்தால் அல்லது தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்: +65 97127901

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தளர்வு: 2027 ஜன.1 முதல்

Photo: Naveen Kumar Singai Tamil reader

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.