“வேலையில் தொடர பணம் கொடு” – வெளிநாட்டு ஊழியர்களை மிரட்டி பணம் பெற்றவருக்கு சிறை

Published: 11 Nov 2026, 8:10 PM |
Migrant workers kickback jail

வேலையில் தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால் பணம் கொடுக்க வேண்டும் என வெளிநாட்டு ஊழியர்களை மிரட்டி லஞ்சம் பெற்ற நபருக்கு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

5 வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்தும் மொத்தம் S$18,000 வெள்ளியை அவர் பெற்றது தெரியவந்துள்ளது, இந்நிலையில் கோ கிம் சியா என்ற அந்த நபருக்கு 49 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கு பணம்

800 Super Waste Management நிறுவனத்தின் முன்னாள் நிறுவன மேலாளராக அவர், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பது, நிர்வகிப்பது மற்றும் Work Permit விண்ணப்பம் செய்வது, புதுப்பிப்பது போன்ற பொறுப்புகளை கவனித்து வந்துள்ளார்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கோ, வெளிநாட்டு ஊழியர்கள் வேலையில் இருக்க வேண்டுமென்றால் பணம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

2021ஜூன் முதல் ஜூலை வரை, 5 வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து S$2,000 முதல் S$4,000 வரை லஞ்ச பணம் பெற்றுள்ளார். மொத்தமாக S$18,000 வெள்ளியை அவர் பெற்றதாக சொல்லப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு

வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்புச் சட்டத்தின் (EFMA) கீழ் மொத்தம் 24 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. மேலும் 19 குற்றச்சாட்டுகள் தண்டனையின்போது பரிசீலனை செய்யப்படும்.

இதனை அடுத்து, கோவுக்கு 49 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

MOM எச்சரிக்கை

வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் தக்கவைக்கவோ அல்லது வேலையில் சேர்க்கவோ பணம் பெறுவது கடும் குற்றமாகும் என மனிதவள அமைச்சகம் (MOM) எச்சரித்துள்ளது.

EFMA சட்டத்தின் கீழ், இதுபோன்ற குற்றங்களுக்கு அதிகபட்சமாக S$30,000 வரை அபராதம், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஊழியர்கள் உதவி பெற…

இதுபோன்று லஞ்ச பணம் கேட்கும் நபர்கள் குறித்து புகார் அளிக்க..

  • MOM உதவி எண்: 6438 5122
  • Migrant Workers Centre: 6536 2692

MOM இணையதளத்திலும் புகார் அளிக்கலாம், புகார் செய்பவரின் ரகசியம் காக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தளர்வு: 2027 ஜன.1 முதல்

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ 8.9 லட்சம் மோசடி – இருவர் கைது: எச்சரிக்கும் காவல்துறை

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களின் செய்திகளை உடனே துல்லியமாக தெரிந்துகொள்ள எங்களின் வாட்ஸ்ஆப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்…

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.