சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முதன்மை பராமரிப்பு திட்டத்தை ஆதரிக்கும் (Migrant Worker Primary Care Plan) Fullerton Health குழுமத்தில் இணைய வழி சைபர் தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வெளிநாட்டு ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
வெளிநாட்டு ஊழியர்களுக்கான முதன்மை பராமரிப்பு திட்டம் என்பது மனிதவள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓர் திட்டமாகும். இதனை Fullerton Health குழுமம் ஆதரித்து வருகிறது.
இந்நிலையில், அந்த குழுமத்தின் சர்வரில் இணையவழி ஊடுருவல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், வெளிநாட்டு ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் கூறப்படுகிறது. அதாவது,
- பெயர்
- அடையாள அட்டை எண் (FIN)
- பிறந்த தேதி
- கைபேசி தொடர்பு எண்
- குடியிருக்கும் முகவரி
- மின்னஞ்சல் முகவரி
ஆகிய விவரங்கள் கசித்திருக்கலாம் என Fullerton Health குழுமம் கூறியுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை
இணைய தாக்குதல் குறித்த தகவல் தெரிந்தவுடன் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இணையத்தை வலுப்படுத்தியதாக அது கூறியது.
மேலும் குழுமத்தின் பிற தனிப்பட்ட சுகாதார மற்றும் நிதி விவரங்களில் எந்த ஊடுருவலும் இல்லை எனவும் அது கூறியது.
புகார்
இந்த சம்பவம் தொடர்பாக PDPC பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டு, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மனிதவள அமைச்சகத்துடன் (MOM) அக்குழுமம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு பாதிப்பா?
இந்த இணைய ஊடுருவலால் பாதிப்புக்குள்ளான வெளிநாட்டு ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, தேவையான வழிகாட்டுதல்களையும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் வழங்க குழுமம் திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களாகிய நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, முன்பின் தெரியாத நபர்களின் அழைப்புகள், SMS மற்றும் ஈமெயில் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உங்களின் கைபேசி எண்களுக்கு வரும் OTP எண்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
மேலும் வங்கி, ATM போன்ற தனிப்பட்ட விவரங்களை யாருக்கும் பகிர வேண்டாம்.
Photo: Giving.sg
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தளர்வு: 2027 ஜன.1 முதல்
சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ 8.9 லட்சம் மோசடி – இருவர் கைது: எச்சரிக்கும் காவல்துறை
சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களின் செய்திகளை உடனே துல்லியமாக தெரிந்துகொள்ள எங்களின் வாட்ஸ்ஆப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்…