சிங்கப்பூரில் பணிபுரிந்த இந்தியர் கார் பார்க்கிங் பிரச்சனையில் சொந்த ஊரில் கொ*லப்பட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் ஃபரிதாபாத் பகுதியை சேர்ந்தவர் 42 வயதுமிக்க பரம்ஜீத் தங்கர், இவர் சிங்கப்பூரில் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் உயர் பதவியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சொந்த ஊரான பரிதாபாத் பகுதிக்கு உறவினர் திருமணத்திற்காகவும், தீபாவளிக் கொண்டாட்டத்திலும் கலந்துகொள்ளவும் நவ.5 ஆம் தேதி இந்தியா வந்துள்ளார்.
அவரின் குடியிருப்புக்கு வெளியே கார் பார்க்கிங் செய்வது தொடர்பில் மோனு சர்மா என்பருக்கும் பரம்ஜீத்க்கும் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
என்ன நடந்தது?
அதாவது, நவ.6 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் சர்மா, பரம்ஜீத் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி வெளியே வருமாறு அழைத்துள்ளார். கதவை திறந்ததும் கீழே நிறுத்தப்பட்ட காரை நகர்த்தி நிறுத்துமாறு பரம்ஜீத்திடம் கூறியுள்ளார்.
இதனை அடுத்து, பரம்ஜீத் மற்றும் அவரது 19 வயது மகன் சௌர்யா ஆகியோர் கீழே பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே பார்க்கிங் தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் கோபமடைந்த சர்மா தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து சரமாரியாக சுட்டதாக சொல்லப்படுகிறது.
அதாவது, 14-15 முறை சுட்டதாகவும் அதில் 8 அல்லது 9 புல்லெட்டுகள் அவர் மீது பாய்ந்ததாகவும் செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.
சௌர்யாவை நோக்கியும் அவர் சுட்டதாகவும் ஆனால் அவர் நிறுத்தப்பட்ட கார்களுக்குப் பின்னால் மறைந்துகொண்டதால் காயமின்றி தப்பியதாகவும் சௌர்யா கூறினார்.
பின்னர், சர்மா சம்பவ இடத்திலிருந்து வாகனத்தில் ஏறி தப்பியோடியதாகவும் சௌர்யா கூறினார்.
காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பரம்ஜீத் சிகிச்சை பலனின்றி மாண்டதாக கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை (நவ.7) அன்று சர்மா காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
தென்காசியை சேர்ந்த ஊழியர் சிங்கப்பூரில் கொலை.. “மகனின் கொலைக்கு நீதி வேண்டும்” – கண்ணீரில் குடும்பம்
சிங்கப்பூர் தொடர்பான இந்திய செய்திகள் அறிந்துகொள்ள இணைப்பில் இருங்கள் எங்கள் வாட்ஸ்ஆப் குழுவில்…