சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ 8.9 லட்சம் மோசடி – இருவர் கைது: எச்சரிக்கும் காவல்துறை

Published: 9 Nov 2026, 3:41 PM |
Posted By: Editor
Singapore Job Scam arrested Men

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக சொல்லப்படும் இருவர் தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த அவர்கள் இருவரையும் தஞ்சாவூர் சைபர் க்ரைம் காவல்துறை 10 நாட்களுக்கு முன்னர் கைது செய்தது.

அவர்களிடமிருந்து வங்கி தொடர்புடைய ஆவணங்கள், ATM மற்றும் கைப்பேசி ஆகியவை கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் இந்த மோசடியில் தொடர்புடையதாக சொல்லப்படும் ஆனந்த் சரவணன் என்பவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

“சிங்கப்பூரில் வேலை” என மோசடி

அவர்கள் இருவரும் தஞ்சாவூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி கிட்டத்தட்ட ரூ.8.90 லட்சத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது.

வெளிநாட்டுக்கு வேலைக்கு போக வேண்டும் என்ற முனைப்போடு இருந்த கோவிந்தராஜ் சமூக ஊடகங்கள் வழியே வந்த “சிங்கப்பூரில் வேலை” என்ற விளம்பரத்தை பார்த்து வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்துள்ளார்.

அந்த குழுவில் அறிமுகமான ஆனந்த் சரவணன் என்ற நபர் சிங்கப்பூரில் வேலை இருக்கிறது என கூறி கோவிந்தராஜிடம் பணத்தை கறக்க ஆரம்பித்துள்ளார்.

சிங்கப்பூர் சென்றால் குடும்பத்தை முன்னேற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் அவர் கேட்கும்போதெல்லாம் பணத்தை தவணை முறையில் கொடுத்துள்ளார் கோவிந்தராஜ்.

புகார்

மொத்தமாக ரூ.8,89,600 தொகையை வாங்கிக்கொண்ட ஆனந்த் சரவணன் வேலையை வாங்கி தராமல் தட்டிக்கழித்து வந்துள்ளார், பின்னர் தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த கோவிந்தராஜ் தஞ்சாவூர் சைபர் கிரைம் காவல்துறையை இணைய வழி மூலம் நாடினார்.

அதன் பின்னர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கிய அதிகாரிகள், இதில் தொடர்புடையவர்கள் யார் யார் என்பதையும் மோசடி செய்த நபர் பயன்படுத்திய கைபேசி எண்ணை யார் யார் பயன்படுத்தியது, மேலும் கைபேசி அழைப்புகள், வங்கி பரிவர்த்தனை மூலமாக விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணைகளின் அடிப்படையில், சேலம் மாவட்டம் அழகாபுரத்தை சேர்ந்த 39 வயதுமிக்க ஷர்வன் குமார் மற்றும் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 40 வயதுமிக்க அன்வர்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கோவிந்தராஜை முதலில் தொடர்புகொண்ட ஆனந்த் சரவணன் என்பவரை தேடும் பணி தீவீரமாக நடைபெற்று வருகிறது.

எச்சரிக்கை

வெளிநாடுகளில் வேலை தேடுவோர் இதுபோன்ற வாட்ஸ்ஆப் வலைத்தளங்களில் மூலம் அறிமுகமாகும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஏஜெண்டுகள் உண்மை தன்மையையும் சரிபார்க்க வேண்டும். உண்மையில் வேலைக்கு எடுக்கும் நபர்கள் இவ்வளவு பெரிய தொகையை வேலைக்கு சேர்க்கும் முன் பெற மாட்டார்கள்.

அதே போல, வேலைக்கு எடுக்கும் நபர்களின் உண்மை தன்மையை சரிபாருங்கள், நமக்கு தெரிந்த நம் பகுதியில் உள்ள ஏஜெண்டுகளை தொடர்பு கொள்ளுங்கள், ஏனெனில் நேரடியாக அவர்களை சந்தித்து வேலை தொடர்பான அனைத்து விளக்கத்தையும் பெற முடியும்.

தெரிந்த நபர் என்பதால் ஏமாற்றும் வாய்ப்பும் குறைவு, ஒரு வேலை ஏமாற்றினால் கூட புகார் அளிப்பது இலகுவாக இருக்கும்.

தென்காசியை சேர்ந்த ஊழியர் சிங்கப்பூரில் கொ*ல – கண்ணீரில் குடும்பம்

“சிங்கப்பூர், மலேசியா to திருச்சி” – தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விமான சேவைகள்!

இதுபோன்ற பயனுள்ள சிங்கப்பூர் செய்திகள் அறிந்துகொள்ள இணைப்பில் இருங்கள்…

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel