“சொன்ன வேலை ஒன்று செய்வது ஒன்று” – 270 வெளிநாட்டு ஊழியர்கள் விதிமீறல்? – 45 நிறுவனங்களிடம் விசாரணை

Published: 2 Nov 2026, 6:02 PM |
mom-probes-45-firms foreign workers work pass

சாங்கி விமான நிலைய செயல்பாடுகளோடு தொடர்புடைய சுமார் 45 நிறுவனங்களை மனிதவள அமைச்சகம் (MOM) விசாரித்து வருகிறது.

போலியான அறிவிப்புகள் (declarations) மற்றும் வெளிநாட்டு ஊழியர்களைச் சட்டவிரோதமாக வேலைக்கு எடுத்தது உள்ளிட்ட வேலை அனுமதி (Work Pass) தொடர்புடைய சந்தேக விதிமீறல்கள் குறித்து MOM விசாரித்து வருகிறது.

விமான நிலையத்துக்கு தரைவழி சேவைகளை வழங்கும் SATS ஒப்பந்த நிறுவனம் மற்றும் அதன் துணை ஒப்பந்த நிறுவனம் மூலம் வேலைக்கு அமர்த்தப்பட்ட சுமார் 270 ஊழியர்கள், வேலை அனுமதி விதி மீறல்களில் ஈடுபட்டிருக்கலாம் என MOM அடையாளம் கண்டுள்ளது.

சாங்கி விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த சோதனையில், Employment Pass (EP) அனுமதி வைத்திருக்கும் ஊழியர்கள் பயணப்பெட்டிகளை கையாளும் (baggage handling) வேலையை செய்தது கண்டறியப்பட்டது, இதனை அடுத்து இந்த விசாரணை தொடங்கியது.

EP அனுமதி வைத்திருக்கும் அவர்கள் MOM -யிடம் சமர்ப்பித்த சம்பளம் மற்றும் வேலை தொடர்பான விவரங்கள் போலியானவை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக MOM கூறியுள்ளது.

அதே போல, மற்ற வேலை அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்களும் சமர்ப்பித்த வேலைக்கு மாறாக பயணப்பெட்டிகளை கையாளும் வேலையை செய்தது கண்டறியப்பட்டது.

சந்தேகிக்கப்படும் அனைத்து நபர்களிடமும் விசாரணை நடைபெறுவதாக MOM தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களுக்கு S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.மேலும் வேலை அனுமதி வைத்திருப்பவர்களை வேலைக்கு எடுக்க தடையும் விதிக்கப்படலாம்.

அதேபோல, வேலை அனுமதி விண்ணப்பத்தில் போலியான தகவல்களை சமர்ப்பித்த குற்றம் கண்டறியப்படுபவர்களுக்கு, S$20,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது இவை இரண்டுமே விதிக்கப்படலாம்.

ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியரும் வேலை அனுமதி விதிகளின்படி பணிக்கு சேர்க்கப்படுகிறார்களா என்பதை SATS நிறுவனம் சரிபார்க்கவேண்டும் என்றும் குறைபாடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் என்றும் MOM கேட்டுக்கொண்டுள்ளது.

வேலை அனுமதி விதிமீறல் குறித்து பொதுமக்களே புகார் அளிக்கலாம் என MOM குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு போலியாக வேலைக்கு எடுக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் – MOM எச்சரிக்கை

உரிமமில்லா வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி: 300 படுக்கைகள்… 173 ஊழியர்கள் – சிக்கிய நிறுவனம் மற்றும் பொது மேலாளர்

MOM தொடர்பான செய்திகளை உடனே அறிந்துகொள்ள இணைந்திருங்கள் Singai Tamil தளத்துடன்..

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.