Westlite Accommodation நிறுவனத்தின் தங்கும் விடுதிகளில் வசிக்கும் சுமார் 158 வெளிநாட்டு ஊழியர்கள் (Migrant Workers) யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூரில் நடந்த Halloween Horror Nights என்னும் நிகழ்ச்சியை கண்டு கழித்தனர்.
அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, ஊழியர்கள் அனைவரும் அதன் 10 தங்கும் விடுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட “வெஸ்ட்லைட் குடியிருப்பாளர் தூதர்கள்” (Westlite resident ambassadors) என்றது.
இந்த Westlite Accommodation நிறுவனம், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்கும் இடங்களை வழங்குகிறது.
ஊழியர்களின் பங்களிப்புகளை பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையில் இது ஏற்பாடு செய்யப்படுவதாக அது சொன்னது.
வழக்கமான செயல்பாடுகளில் இருந்து சற்று ஓய்வளித்து புதிய அனுபவங்களை அவர்களுக்கு வழங்கும் நோக்கில் இது ஏற்பாடு செய்யப்பட்டதாக நிறுவனம் கூறியது.
யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூரில், ரைடுகள் மற்றும் பேய் வீடு திகில் நிகழ்வுகளை வெளிநாட்டு ஊழியர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
அவர்களுக்கு விருப்பமான தருணங்களை பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கும் நோக்கில், பரிசுகளுடன் கூடிய புகைப்பட போட்டி ஒன்றையும் அந்நிறுவனம் அறிவித்தது.
அங்கு சென்று வர ஊழியர்களுக்கு பிரத்யேக போக்குவரத்து வசதியும், ஒவ்வொருவருக்கும் உணவுக்காக வேண்டி S$10 வெள்ளி வவுச்சர்களும் கொடுக்கப்பட்டன.
இதுமட்டுமல்லாமல், வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் கூட்டிச்செல்வது, தங்கும் விடுதிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள், மேலும் கணினி வகுப்புகள் போன்றவற்றையும் அந்நிறுவனம் நடத்துகிறது.
சிங்கப்பூர் S Pass அனுமதியில் வேலை பெறுவது எப்படி? முழு வழிகாட்டி
வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்புடைய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள் சிங்கப்பூர் செய்திகள் உடன்…