சிங்கப்பூருக்கு போலியாக வேலைக்கு எடுக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் – MOM எச்சரிக்கை

Published: 19 Oct 2026, 2:31 PM |
MOM Singapore Announcement

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை அனுமதி (Work Pass) ஒதுக்கீட்டை (Quota) போலியாக அதிகரிக்க முயன்றதாக 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

31 முதல் 61 வயதுக்குட்பட்ட 7 முதலாளிகள் மற்றும் நிர்வாக உதவியாளர் ஒருவர் மீதும் வேலை அனுமதி (work pass) விண்ணப்பங்களில் பொய்யான அறிவிப்புகள் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

போலி ஊழியர்கள்

நிறுவனம் தங்களிடம் உண்மையாகவே வேலை செய்யாத உள்ளூர் ஊழியர்களை கணக்கு காட்டி அவர்களின் பெயரில் CPF சேமநிதி பங்களிப்புகளை செலுத்துவது போலி ஊழியர்கள் (Phantom Worker) என்று சொல்லப்படும்.

இவ்வாறு உள்ளூர் ஊழியர்களை அதிகமாக கணக்கு காட்டும் நிறுவனம், வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒதுக்கீட்டை (Foreign worker quota) அதிகரிக்க முயற்சி செய்கிறது.

அவ்வாறு போலியாக அதிகரிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டை வைத்து, கூடுதலாக ஒர்க் பாஸ் அனுமதிகளை விண்ணப்பித்து வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டுக்குள் அழைத்துவரப்படுகின்றனர்.

DRC ஒதுக்கீடு

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க நிறுவங்களுக்கு Dependency ratio ceiling (DRC) என்னும் ஒதுக்கீடு வரம்பு உண்டு.

  • கட்டுமானம் மற்றும் செயல்முறை துறை: 83.3%
  • கடல் மற்றும் கப்பல் தளம்: 75%
  • உற்பத்தி: 60%
  • சேவைத் துறை: 35%

உள்ளூர் ஊழியர்கள் அதிகமாக வேலை செய்வதாக போலி கணக்கு காட்டி மேற்கண்ட ஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்தும் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களின் ஒதுக்கீட்டை அதிகரித்து வேலைக்கு விண்ணப்பிக்கும்.

இதில் தொடர்புடைய 3 போலி ஊழியர்கள் மீது நிர்வாக ரீதியான நிதி அபராதங்கள் விதிக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

அதே போல வேலை அனுமதியில் மோசடி செய்வது கடுமையான குற்றம் என்று கூறிய MOM அவர்களிடன் விசாரணை நடத்தி வருவதாக சொன்னது.

கடும் தண்டனையும் எச்சரிக்கையும்

மோசடியாக வேலை அனுமதி விண்ணப்பங்களில் தவறான தகவல்களை கொடுத்தது நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக S$20,000 வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிறுவனம் அல்லது நபர்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க தடை விதிக்கப்படலாம்.

அதேபோல, kickback என்னும் லஞ்ச பணம் பெற்றது நிரூபிக்கப்பட்டால், S$30,000 வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

MOM தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள “சிங்கப்பூர் செய்திகள்” உடன் இணைப்பில் இருங்கள்..

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.