சிங்கப்பூரில் ஹாக்கர் சென்டர்ஸ் (Hawker centres) எனப்படும் 4 உணவங்காடி நிலையங்கள் தூய்மைப் பணிக்காக மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்று (நவ.23) முதல் நாளை மறுநாள் (நவ.25) வரை இந்த மூடல் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 உணவங்காடி நிலையங்கள்
- Dunman உணவு நிலையம் – நவ.23 மட்டும் மூடப்படும்
- Holland வில்லேஜ் மார்க்கெட் மற்றும் உணவு நிலையம் – நவ.23 மட்டும் மூடப்படும்
- பாசிர் பஞ்சாங் உணவு நிலையம் – நவ.23 மட்டும் மூடப்படும்
- Fernvale ஹாக்கர் மற்றும் உணவு நிலையம் – நவ.23 முதல் நவ.25 வரை மூடப்படும்
அதே போல, மொத்தம் 21 உணவங்காடி நிலையங்கள் வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 6 வரை சுத்தம் செய்யும் பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
கிளமென்டி வெஸ்ட் ஸ்ட்ரீட் 2 புளோக் 726, தெலோக் பிளாங்கா ரைஸ் மார்க்கெட் மற்றும் கிம் கீட் பாம் மார்க்கெட் மற்றும் உணவு நிலையம் ஆகியவை பழுதுபார்த்து மற்றும் புதுப்பிப்பு பணிகளுக்காக டிசம்பர் நடுப்பகுதி முதல் மாத இறுதி நாள் வரை மூடப்பட்டிருக்கும்.
சுத்தம் நிறைந்த சுகாதாரமான சூழலில் சிங்கப்பூரர்கள் உணவருந்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மூடல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு (NEA) கூறியுள்ளது.
சிங்கப்பூரில் உள்ளாடைகளை திருடிய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை
Photo: Pexels
சிங்கப்பூரின் முக்கிய அறிவிப்புகளை உடனே தெரிந்துகொள்ள சிங்கை தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைந்திருங்கள்!