சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டு இறுதி விடுமுறைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாட கேபிள் காரில் (Singapore Cable Car) இலவசமாக பயணம் செய்ய ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
செந்தோசா பாதையில் (Sentosa Line) மட்டும் காலை நேரத்தில் இந்த இலவச பயணத்தை அனுபவிக்க முடியும்.
இந்த செந்தோசா பாதை எந்தந்த பாதைகளை இணைக்கிறது?
Sensoryscape நிலையம்
இது Resorts World Sentosa மற்றும் Imbiah Sentosa Express நிலையத்துக்கு அருகே அமைந்துள்ளது. இலவச பயணத்தை தொடங்க இது ஓர் வசதியான இடமாக இருக்கும்.
Imbiah Lookout நிலையம்
இது SkyHelix Sentosa மற்றும் SkyLine Luge அருகே அமைந்துள்ளது. இதன் அருகிலேயே Arbora Café உள்ளது.
Siloso Point நிலையம்
இந்த நிலையத்திருந்து Siloso கடற்கரைக்கும் Shangri-La Rasa Sentosa ரெசார்ட்டுக்கும் எளிதாக செல்ல முடியும்.

எப்போது?
இன்று நவ.21 முதல் வரும் டிசம்பர் 20 வரை, தினமும் காலை 8.45 முதல் 11 மணி வரை இந்த இலவச பயணத்தை அனுபவிக்கலாம்.
ஏதும் டிக்கெட் பெற வேண்டுமா?
இதற்காக வேண்டி முன்கூட்டியே எந்த வித நுழைவு சீட்டும் பெற வேண்டிய தேவை இல்லை. நேரடியாக சென்று பயணத்தை அனுபவிக்கலாம்.
வழக்கமாக வசூல் செய்யப்படும் கட்டணம்
இலவசம் அல்லாத சாதாரண பயணத்துக்கு பெரியவர்களுக்கு (ஒரு சுற்றுக்கு) S$17 கட்டணமும், 4–12 வயதுடைய பிள்ளைகளுக்கு S$12 கட்டணமும் வசூல் செய்யப்படும்.
Mount Faber Peak, HarbourFront மற்றும் செந்தோசா தீவை இணைக்கும் ஒரே தீவு பாதையாக இந்த சிங்கப்பூர் கேபிள் கார் அமைப்பு உள்ளது.
குறிப்பு: Mount Faber Peak, HarbourFront, செந்தோசா ஆகியவற்றை இணைக்கும் Mount Faber Line பாதை இந்த இலவச சலுகையின்கீழ் வராது.
கூடுதல் தகவல் அறிய அதன் அதிகாரபூர்வ இணையத் தளத்தை பார்வையிடவும் – Mount Faber Leisure Group
சிங்கப்பூரில் வெளியாகும் இலவச சலுகைகளை துல்லியமாக தெரிந்துகொள்ள சிங்கப்பூர் செய்திகள் வாட்ஸ்ஆப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்..