வேலையிட WHS அதிகாரிகளின் பதிவு செல்லுபடி காலம் நீட்டிப்பு – 2027 ஜனவரி முதல் அமல்

Published: 17 Nov 2026, 1:50 PM |
whs-officers-registration-validity-extended 2027

வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகளின் (WHS) பதிவு செல்லுபடி காலம் (Registration validity) 2 ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது, இது 2027 ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த மாற்றம், புதிதாக செய்யப்படும் பதிவுகளுக்கும் மற்றும் புதுப்பித்தல்களுக்கும் (renewals) பொருந்தும்.

இதனை, கிராண்ட் ஹயாட் சிங்கப்பூரில் நேற்று (நவ. 16) நடந்த WSH கூட்டம் ஒன்றில் மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் அறிவித்தார்.

கடும் வேலைப்பளுவுக்கு மத்தியில் WHS அதிகாரிகள் தொழில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய மாற்றம் கொண்டு வரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

வேலையிட மரணம் அதிகரிப்பு

இந்த ஆண்டில் முதல் பாதி நிலவரப்பபடி, வேலையிடம் தொடர்பான பெரும் விபத்துகளின் எண்ணிக்கை (பிளாட்பார்ம் ஊழியர்கள் தவிர்த்து) 1 லட்சம் ஊழியர்களுக்கு 14.6 விகிதம் என வரலாறு காணாத அளவில் குறைந்தது.

இருந்தாலும், வேலையிடங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக கூறப்பட்டுள்ளது.

வேலையிட மரணங்களில் முக்கியமாக வாகனம் தொடர்புடையவை அதிகம் என்பதை மனிதவள அமைச்சகம் (MOM) செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் சொன்னது.

அதில் பதிவான 21 வேலையிட மரணங்களில், 9 மரணங்கள் வாகனம் தொடர்புடையவை.

ஊழியர்களின் உயிர்கள் முக்கியம்

நிறுவனத் தலைவர்கள் பாதுகாப்பை முன்னுரிமையாகவும், ஊழியர்களின் உயிர்கள் முக்கியம் என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் தினேஷ் கூறினார்.

அதே வேளையில், பாதுகாப்பு விதி மீறல்கள் மற்றும் ஆபத்துகள் குறித்து ஊழியர்கள் தைரியமாக தயக்கமின்றி புகார் அளிக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூர் Work Permit விண்ணப்பம், நடைமுறையில் புதிய மாற்றம் – நவ.29 முதல் அமல்

Photo:Ministry of Manpower / Facebook

MOM அறிவிப்புகளை உடனே தெரிந்துகொள்ள இணைந்து இருங்கள் சிங்கப்பூர் செய்திகள் உடன்…

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.