வேன், பைக் மோதல்: விசாரணையில் ஒருவர்…

Published: 10 Sep 2026, 11:30 PM |

சிங்கப்பூர் யுசூன் பகுதியில் வேன் மற்றும் பைக் மோதிக்கொண்ட சம்பவத்தில் பைக் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து யுசூன் ஸ்ட்ரீட் 81 பகுதியில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை நேரில் கண்ட பெண் ஒருவர் 995 அவசர எண்ணை தொடர்பு கொண்டு உதவி நாடினார்.

அதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதில் அவ்வழியாக சென்ற பொதுமக்களும் காயமடைந்த நபருக்கு உதவியதாக கூறப்படுகிறது.

மேலும் காவல்துறை மற்றும் SCDF வீரர்களுக்கும் விபத்து குறித்து தகவல் கிடைத்தது.

விபத்தில் காயமடைந்த 25 வயதுமிக்க அந்த ஓட்டுநர் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Photo: Stomp

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.