ஊழல், போதைப்பொருள்… “சிங்கப்பூர் போல சட்டங்கள் தமிழ்நாட்டிலும் வேண்டும்” – ஸ்ரீதர் வேம்பு கோரிக்கை

Published: 24 Aug 2026, 3:07 PM |

ஊழல் மற்றும் போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக சிங்கப்பூரில் நடப்பில் இருப்பது போல கடுமையான சட்டங்களை தமிழ்நாட்டிலும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என முதலமைச்சர் விஜயிடம் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கோரிக்கை வைத்துள்ளார்.

X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மதிப்பிற்குரிய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், போதைப்பொருள் விற்பனை மற்றும் உயர்மட்ட ஊழலுக்கு எதிராக சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள கடுமையான சட்டங்களைப் போன்று (தமிழ்நாட்டில்) அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்” என்றார்.

மேலும், கடும் குற்றங்களுக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்படுவது குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர்கள், IAS, IPS உள்ளிட்ட அனைத்திந்திய சேவைகளில் இருக்கும் அதிகாரிகளின் சம்பளத்தை கணிசமாக உயர்த்த வேண்டும் எனவும் அவர் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கடந்த காலத்தில் நடந்த ஊழல் தவறுகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் இதனால் பழைய ஊழல் சம்பவங்கள் குறித்த தொடர் விவாதங்களை தவிர்க்கலாம், என்றார்.

குறிப்பாக, சிங்கப்பூர் தந்தையும் நிறுவன பிரதமருமான லீ குவான் யூவின் தீவிர ஆதரவாளரான ஸ்ரீதர், அமரர் லீயின் அணுகுமுறைகளை கற்று நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.