சிங்கப்பூரில் “ஒர்க் பெர்மிட்” எண்ணிக்கை அதிகரிக்குமா? – பிரதமர் பதில்

Published: 24 Aug 2026, 1:29 PM |
Work Permit Migrant Workers Singapore

NDR 2026: “சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களை தொடர்ந்து வரவேற்றாலும், அவர்களின் எண்ணிக்கை கவனமாகவும் கட்டுப்படுத்தப்பட்ட முறையிலும் நிர்வகிக்கப்படும்” என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தனது உரையில் தெளிவுபட கூறியுள்ளார்.

“அதே நேரத்தில் சிங்கப்பூர் குடிமக்களின் (வேலைவாய்ப்பு) எண்ணிக்கை அளவான மற்றும் நிலையான வேகத்தில் அதிகரிக்கப்படும்” என்றார்.

சிங்கப்பூரர்களே பெரும்பான்மை

எந்த நிலையிலும், “சிங்கப்பூரர்களே நாட்டின் அதிக பெரும்பான்மை எண்ணிக்கையில் இருப்பதை உறுதி செய்வோம்” என்றும் திரு. வோங் கூறியுள்ளார்.

“வரும் ஆண்டுகளில், சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகை வளர்ச்சியும் ஊழியரணியின் எண்ணிக்கையும் மெதுவாக இருக்கும்” என்று பிரதமர் வோங் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களை அனுமதிக்க கோரிக்கை

சிங்கப்பூரர்கள் விரும்பாத அல்லது தயக்கம் காட்டும் வேலைகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களை அனுமதிக்க வேண்டி, வெளிநாட்டு ஊழியர் கொள்கைகளில் தளர்வு செய்ய சேவைத் துறையில் உள்ள நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழில்கள் அரசாங்கத்திடம் அடிக்கடி கோரிக்கை வைப்பதாக அவர் உரையில் குறிப்பிட்டார்.

“ஆனால், சிங்கப்பூரில் ஏற்கனவே ஒர்க் பெர்மிட் (work permit) வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் மிக பெரிய குழுவாக இருக்கின்றனர்.”

“எனவே, அவர்களின் தற்போதைய கொள்கைகளில் ஏதேனும் சிறிய தளர்வு செய்தால் கூட வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துவிடும். அதனால் நாம் அந்த முடிவை எடுக்க முடியாது” என்பதை அவர் தெளிவுபட கூறினார்.

பொருளியல் வளர்ச்சிக்கு முன்னெடுப்பு

வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்தாமல், சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், அதற்காக தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வெளிநாட்டவர்களுக்கு சிறந்த நாடாக சிங்கப்பூர் இருக்கும் என்பதை மேற்கோள்காட்டி பேசிய திரு.வோங், சிங்கப்பூர் நாம் அறிந்து நேசித்து வரும் நாடாக தொடர்ந்து அதே அடையாளத்துடன் இருக்கும் என்று சிங்கப்பூரர்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் என்றார்.

வெளிநாட்டவர்களும் சிங்கப்பூரர்களும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என்பதையும் அவர் மேற்கோளிட்டு பேசினார்.

தேசிய தின பேரணி உரையை (NDR)

நேற்று (ஆக.23) சிங்கப்பூரின் தேசிய தின பேரணி உரையை (NDR) பிரதமர் லாரன்ஸ் வோங் நிகழ்த்தினார், அதில் சிங்கப்பூரின் எதிர்கால கட்டமைப்பு குறித்து அவர் முக்கிய உரை நிகழ்த்தினார்.

அந்த உரையில் வெளிநாட்டு ஊழியர்கள் கொள்கைகள் குறித்து அவர் பேசினார்.

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.