நேபாள வெள்ளம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) நிறுவனத்தின் ஏர் இந்தியா முதலீடு குறித்து இனவாத கருத்துக்களை வெளியிட்ட 5 பேர் அடையாளம் காணப்பட்டனர், மேலும் அவர்களிடம் சிங்கப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் கைதான அவர்களின் வயது 29 முதல் 66 வயதுக்கு உட்பட்டு இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
அவர்களிடம் இது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் சிங்கப்பூர் போலீஸ் இன்று (செப்டம்பர் 9) தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர், இனவாத கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்ட மூத்த அமைச்சர் க. சண்முகம், காவல்துறை விசாரணைக்கு பரிந்துரைத்ததாக சொன்னார்.
“இந்திய சமூகத்துக்கு எதிரான இனவாத, வெறுப்புணர்வு கருத்துக்கள் மிகவும் கவலைக்குரியது” என்று மூத்த அமைச்சர் லீயும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மேலும் தனிநபர் வழக்குகள் தொடர்பான கூடுதல் விவரங்களை தற்போது வெளியிட முடியாது என்றும் காவல்துறை கூறியுள்ளது.
பல இன, சமூக மக்கள் ஒன்றாக வாழும் சிங்கப்பூரில், ஒற்றுமையை சீர்குலைக்கும் இனவாத கருத்துக்களை கடுமையாக பார்ப்பதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
மேலதிக விவரங்களை பெற இணைப்பில் இருங்கள் “சிங்கப்பூர் செய்திகள்” உடன்…