“பூமிலேயே கட்டுப்பாடுகள் அதிகம் கொண்ட நாடு சிங்கப்பூர்”- 29 நாடுகள் பயணித்த அமெரிக்க இளைஞர் கருத்து

Published: 7 Sep 2026, 4:00 PM |
Keith Sinclair

உலகம் முழுவதும் 29 நாடுகளுக்கு பயணித்த அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் “பூமிலேயே கட்டுப்பாடுகள் அதிகம் கொண்ட நாடு சிங்கப்பூர்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பகுதியை சேர்ந்த 29 வயதுமிக்க Keith Sinclair என்ற அந்த இளைஞர் தனது மாற்றியமைக்கப்பட்ட ‘டாட்ஜ் சேலஞ்சர்’ (Dodge Challenger) காருடன் சிங்கப்பூருக்குள் வர 2 முறை அனுமதி கோரியும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் காரில் பயணம் செய்து வரும் அந்த இளைஞர் இதுவரை 29 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த இலக்காக சிங்கப்பூர் தேர்வு செய்த அவர், தனது மாற்றியமைக்கப்பட்ட காருடன் சிங்கப்பூர் வர அனுமதி கேட்டுள்ளார்.

ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது, இதற்கு டாட்ஜ் சேலஞ்சர் காரில் செய்யப்பட்ட மாற்றங்களே முக்கிய காரணமாக அதிகாரிகளால் கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த காரில் “குழாய் வசதி, சமையல் அடுப்பு, ஊஞ்சல் படுக்கை மற்றும் மேற்கூரை பெட்டி” உள்ளிட்டவை இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், காரில் இருக்கும் மாற்றங்களை அகற்றினால் மட்டுமே சிங்கப்பூருக்குள் வர அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியதால் அவர் சில மாற்றங்களை அகற்றியதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும் மேற்கூரை பெட்டி, காருக்கு பின்னால் இருந்த குழாய் போன்றவை குறித்து அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், குழாய் அமைப்பை அகற்றியும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் “பூமிலேயே கட்டுப்பாடுகள் அதிகம் கொண்ட நாடு” (most restrictive country on Earth) என்று அவர் காணொளி வெளியிட்டுள்ளார்.

இனி சிங்கப்பூர் வருவது சாத்தியமில்லாத ஒன்று என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் காணொளியில் கூறினார்.

இந்த காணொளி இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் தளங்களில் வைரலாகி வருகிறது.

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.