மதுபோதையில் முதலாளியை தாக்கிய வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சிறை

Published: 25 Aug 2026, 12:49 PM |

சிங்கப்பூரில் வயதான தன் முதலாளியை தாக்கிய 32 வயது வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு ஆக.24 அன்று 17 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மியான்மர் நாட்டைச் சேர்ந்த வெய் நெய் சோங் என்ற அந்த பணிப்பெண் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு தண்டனை வழங்கப்பட்டதாக The Straits Times செய்தி வெளியிட்டுள்ளது.

புக்கிட் மேராவில் நடந்த இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட 83 வயதான முதலாளியுடன் அவர் மட்டுமே தங்கி வேலை செய்து வந்ததாக கூறப்பட்டுள்ளது.

முதலாளி Alzheimer என்னும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவரின் அடிப்படை தேவை அனைத்திற்கும் பணிப்பெண்ணையே அவர் சார்ந்து இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

என்ன நடந்தது?

கடந்த ஜூலை 28 அன்று, பணிப்பெண் தனது காதலனுடன் அலைபேசியில் பேசியதாகவும், இருவரும் சண்டை போட்டுக் கொண்டதாகவும், அப்போது பணிப்பெண் மதுபோதையில் இருந்தததாகவும் கூறப்படுகிறது.

அதோடு, வீட்டில் இருந்த முதலாளியிடம் கோபமாக சத்தம் போட்டு, நாற்காலியை அவர் உதைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முதலாளியின் நடை உதவி கருவியை தூக்கி வீசிய பணிப்பெண், அவரை கீழே தள்ளி, முதுகில் உதைத்துள்ளார்.

பின்னர் வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது மீண்டும் முதலாளியை கீழே தள்ளி வீசியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவரின் கை, கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு, சுமார் 2 வாரங்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அலறல் சத்தம் கேட்டு பக்கத்துக்கு வீட்டுக்காரர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

இந்நிலையில், அவருக்கு 17 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சட்டம்

இதுபோன்ற குற்றத்திற்கு அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, S$10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Photos: Maxim Hopman/Unsplash and AFP

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.