வெளிநாட்டு ஊழியர்களும் சூதாட்டமும்.. சிங்கப்பூரில் அதிகரிக்கும் தடை – பாதிக்கப்படும் ஒர்க் பெர்மிட் ஊழியர்கள்

Published: 20 Aug 2026, 6:07 PM |

வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளம், சேமிப்பு மற்றும் அவர்களின் குடும்ப வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கும் சூதாட்டங்களில் இருந்து ஊழியர்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகள் சிங்கப்பூரில் அதிகரித்து வருகின்றன.

2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 24,000 வெளிநாட்டவர்களுக்கு Singapore Pools இணையத்தில் பந்தயம் கட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 4,100 ஆக இருந்தது. இதனை சூதாட்ட பிரச்சனைகளுக்கான தேசிய சூதாட்ட தடுப்பு கவுன்சில் (NCPG) வெளியிட்ட புள்ளிவிவரங்களின் காணமுடிந்தது.

அதேபோல 2024ஆம் ஆண்டில், ஜாக்பாட் மெஷின் ரூம்ஸ் என்று அழைக்கப்படும் ஆட்டங்களில் இருந்து தடை விதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 28,000 ஆக அதிகரித்தது. இது 2022ஆம் ஆண்டில் 5,100 ஆக இருந்தது.

சூதாட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு பெற்ற வெளிநாட்டவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் Work Permit அனுமதி வைத்திருக்கும் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாளிகள் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை

இந்த தடைகளின் அதிகரிப்பை சூதாட்டம் அதிகரித்து விட்டதாக நாம் பார்க்கக்கூடாது. மாறாக இவைகள் வெளிநாட்டு ஊழியர்களின் முதலாளிகள் மேற்கொள்ளும் எச்சரிக்கை நடவடிக்கைகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என NCPG தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு முதல் கேசினோ மட்டுமின்றி பல்வேறு சூதாட்ட நடவடிக்கைகளில் இருந்து தங்களிடம் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களை விலக்கி வைக்க முதலாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை ஊழியர்களின் சம்மதத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.

நுழைவு கட்டணம் இல்லாமல் ஊழியர்கள் சூதாட்ட இடங்களுக்கு செல்லமுடியும் என்பதால் மூன்றில் இரண்டு பங்கு முதலாளிகள், தடைக்கு விண்ணப்பிப்பதாக கூறப்பட்டுள்ளது.

சில நிறுவனங்கள் ஊழியர்களை வேலைக்கு எடுக்கும்போதே ஒப்பந்தத்தில் சுய தடை விண்ணப்ப கையெழுத்து பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.

முதலாளிகளின் கவலை

சில வெளிநாட்டு ஊழியர்கள் சூதாட்டதில் பணத்தை இழந்து அதை சரி கட்ட கடன் வாங்குவதாகவும் பின்னர் கடன்சுமை அதிகரிக்கவும் அதனை கொடுக்க முடியாமல் தடுமாறுவதும் முதலாளிகளின் கவலையாக உள்ளது.

சில நேரங்களில், கடன் கொடுத்தோர் ஊழியர்கள் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு வருவதும், இதனால் சக ஊழியர்களிடம் கடன் வாங்கும் நிலை ஏற்படுவதாகவும் முதலாளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

சூதாட்ட பிரச்சனை வெறுமனவே காசு சம்மந்தப்பட்டது அல்ல, அது ஊழியர்களின் மனம் சம்மந்தப்பட்ட ஒன்று, இதனால் வேலையில் கவனமில்லாமல் இருப்பது, மன அழுத்தம் மேலும் குடும்ப பிரச்சனைகள் தலைதூக்கும்.

விரைவாக கடனை அடைக்கலாம் என்ற எண்ணம்

தங்களுக்கு இருக்கும் கடன்களை விரைவாக அடைத்து விடலாம் என்ற எண்ணத்தில் சில ஊழியர்கள் சூதாட்டத்தில் ஈடுபடகூடும் என நன்யாங் டெக்னாலாஜிக்கல் யூனிவர்சிட்டியின் ஆய்வாளர் கூறியுள்ளார்.

ஆனால், சூதாட்டத்தில் ஈடுபட்டால் இருக்கும் பணத்தையும் இழந்து, சட்டவிரோத முறையில் கடனை வாங்கவும் அது வழிவகை செய்யும் என்பதை அவர்கள் அறிவதில்லை.

ஊழியர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

  • உங்களின் சம்பளத்தை ஒருபோதும் சூதாட்டத்தில் இழக்காதீர்கள்.
  • முதலில், குடும்பத்துக்கு எவ்வளவு பணம் அனுப்ப வேண்டுமோ அதை ஒதுக்குங்கள்.
  • கடனை விரைவாக அடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சூதாட்டத்தை பயன்படுத்த வேண்டாம்.
  • நண்பர்கள் அல்லது உங்களுடன் வேலை செய்யும் சக ஊழியர்களிடம் அதிக கடன் வாங்கி சூதாடுவதை முதற்றிலும் தவிர்க்கவும்.

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.