சண்டையிட்டு, Work Permit பறிக்கப்பட்டதாக பொய் புகார் அளித்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

Published: 14 Sep 2026, 5:17 PM |

சிங்கப்பூரில் ஒருவருடன் சண்டையிட்டதுடன் பொய்யான புகாரை காவல்துறைக்கு அளித்த 41 வயதான வெளிநாட்டு ஊழியருக்கு 13 மாதங்களும் 2 வாரங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் இருவரும் ஒருவருக்கொருவர் முன்பு அறிந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர், புயான் முகமது ஓஜ்ஜல் என்ற ஊழியர் குறித்து வதந்திகளைப் பரப்பியதாகவும் மேலும் பெண்களுடன் பழகி வருவதாகவும் கூறியதை அடுத்து புயான் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

குடிபோதை

இந்நிலையில் புயான், நள்ளிரவு சுமார் 2 மணியளவில் லோரோங் 14 கெய்லாங் (Lorong 14 Geylang) அருகே அமைந்துள்ள காபி கடை ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு பாதிக்கப்பட்ட நபர் தனது உறவினர் ஒருவருடன் மது அருந்திக்கொண்டிருந்தார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது.

அதன் பின்னர் பாதிக்கப்பட்ட நபரும் அவரது உறவினரும் அங்கிருந்து சென்றதாக சொல்லப்படுகிறது.

பொய்யான புகார்

இருப்பினும், அதோடு விடாத புயான் காவல்துறைக்கு தொடர்பு கொண்டு தன்னை இருவர் வழிமறித்து தன்னிடமிருந்து 256 சிங்கப்பூர் டாலர் ரொக்கத்தையும் தனது வேலை அனுமதியையும் (work permit) பறித்துச் சென்றதாகப் பொய்யாக புகார் கூறினார்.

அதன் பின்னர் பாதிக்கப்பட்ட நபரையும் அவரது உறவினரையும் அடையாளம் கண்ட காவல்துறையினர், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

ஆனால் அதே நாள் மாலை 4:30-க்கு பொய்யாக புகார் கொடுத்ததை புயான் ஒப்புக்கொண்டார்.

சம்பவத்தின்போது தாம் மதுபோதையில் இருந்ததாகவும், வேண்டுமென்றே அவரை சிக்கலில் மாட்டிவிடும் நோக்கத்தில் அவ்வாறு பொய்யான புகார் செய்ததாகவும் அவர் விளக்கினார்.

4 குற்றச்சாட்டுகள்

இந்நிலையில், தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல், மிரட்டல், பொய்யான தகவல் அளித்தல் மற்றும் கலகத்தில் ஈடுபட்டது ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளை புயான் முகமது ஓஜ்ஜல் எதிர்கொண்டார்.

அதில் 2 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார், மேலும் செப்டம்பர் 10 அன்று அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்

புயான் முகமது ஓஜ்ஜல் சிங்கப்பூரில் சுமார் 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் கட்டுமான ஊழியராக பணியாற்றிய அவர், படிப்படியாக முன்னேறி தற்போது மேலாளர் என்ற நிலையை அடைந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

சிறைவாசம் முடிந்து அவர் தொடர்ந்து சிங்கப்பூரில் பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக அவரின் வழக்கறிஞர் கூறினார்.

ஒர்க் பாஸ் தொடர்பான மற்ற செய்திகளை இங்கே படிக்கலாம்.

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.