சிங்கப்பூர் SG Arrival Card-ல் புதிய மாற்றம்: 2026 ஆக.26 முதல்

Published: 20 Aug 2026, 2:29 PM |
SG Arrival Card Changes 2026

SG Arrival Card: சிங்கப்பூர் வருகை அட்டை (SGAC) புதிய பொலிவுடன் வரும் ஆக.26 முதல் மாற்றம் காணவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) வெளியிட்ட தகவலின்படி, பயணிகளுக்கு உதவும் வகையில் 19 மொழிகள் மற்றும் Passport Auto fill ஆகிய வசதிகளுடன் அது அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறியுள்ளது.

19 மொழிகளில்

தற்போது நடப்பிலுள்ள 12 மொழிகளை சேர்த்து கூடுதலாக 7 மொழிகள் அறிமுகமாகின்றன.

தற்போதுள்ள மொழிகள்:

தமிழ், ஆங்கிலம், மலாய், வங்காளம், ஜெர்மன், பிரெஞ்சு, வியட்நாமிய மொழி, இந்தி, தாய் மொழி, ஜப்பானிய மொழி, சீனம் மற்றும் கொரியன் மொழி ஆகியவை தற்போதுள்ள மொழிகள்.

புதிதாக சேர்க்கப்படும் மொழிகள்:

அரபு மொழி, Bahasa இந்தோனேசியா, டச்சு, தகலாக் (Tagalog), இத்தாலிய மொழி, ஸ்பானிஷ் மற்றும் ரஷ்யன் மொழி ஆகியவை புதிதாக சேர்க்கப்படுகின்றன.

இதன் மூலமாக பல்வேறு நாடுகளை சேர்ந்த பயணிகள் இலகுவாக அதனை பூர்த்தி செய்ய முடியும்.

தானாக நிரப்பப்படும் பாஸ்போர்ட் ஸ்கேன் (Passport Scan Autofill) வசதி

SG வருகை அட்டையில் கூடுதலாக Passport Scan Autofill என்ற தானாக நிரப்பப்படும் பாஸ்போர்ட் ஸ்கேன் வசதி அறிமுகமாகவுள்ளது.

இதம் மூலம் பயணிகள் தங்களின் பாஸ்ப்போர்ட்டை ஸ்கேன் செய்தால் மட்டும் போதும், பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள் தானாகவே பூர்த்தியாகும்.

தற்போது பயன்பாட்டிலுள்ள “Retrieve with passport” மற்றும் “Retrieve with visa reference number” ஆகிய முறைகளுடன் ஒப்பிடுகையில் இந்த புதிய Autofill வசதி பயணிகளில் தகவல்களை சட்டென்று உள்ளிட உதவும் என ICA கூறியுள்ளது.

“Personal information” பிரிவோடு இந்த பாஸ்போர்ட் ஸ்கேன் செய்யும் வசதி நேரடியாக இணைக்கப்பட்டு இருக்கும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய மாற்றங்கள் MyICA கைபேசி செயலிலும், மேலும் ICA-வின் இணையதளத்திலும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் அறிமுகமாகின்றன. ஆக.26 முதல் பயன்பாட்டுக்கு வரும்.

சிங்கப்பூர் வருகை அட்டை (SGAC) என்றால் என்ன?

விமானம் மற்றும் கடல் வழியாக சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளும் இணையத்தில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டிய மின்னணு சுகாதார அறிவிப்பு (Arrival Information + Electronic Health Declaration) இதுவாகும்.

இது embarkation/disembarkation என்ற வெள்ளை காகித அட்டைகளுக்கு பதிலாக 2020 மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

யார், எப்போது சமர்ப்பிக்க வேண்டும்?

சிங்கப்பூருக்குள் வரும் 3 நாட்களுக்குள் இதை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது, நாம் சிங்கப்பூர் வரும் நாளையும் சேர்த்து 3 நாட்களுக்குள் மட்டுமே அதனை சமர்ப்பிக்க வேண்டும்.

இதனை ICA-வின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் இலவசமாக செய்யலாம்.

Work Pass அனுமதியின்கீழ் இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் இதனை கட்டாயம் செய்யவேண்டும்.

Transit passengers என்று சொல்லப்படும் இடைவழி பயணிகள் இதனை செய்யவேண்டியது இல்லை.

PHOTO: Trip.com

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.