சிங்கப்பூரில் சுமார் 22 ஆண்டுகளுக்கு மேலாக அதாவது 8,081 நாட்கள் Overstay செய்து சட்டவிரோதமாக தங்கி இருந்த சீனப்பெண்ணுக்கு தற்போது 6 மாத சிறைத் தண்டனையும் S$2,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
57 வயதுமிக்க வாங் யுயிங் என்ற அந்த பெண், சிங்கப்பூரில் தனது அனுமதி பாஸ் காலாவதியான பிறகும் தங்கி இருந்ததை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், அவருக்கு குடிநுழைவு சட்டத்தின்கீழ் தண்டனை விதிக்கப்பட்டது.
காவல்துறையிடம் சரண்
புக்கிட் மேரா கிழக்கு அக்கம் பக்க காவல் நிலையத்தில் (Bukit Merah East Neighbourhood Police Centre) கடந்த ஆகஸ்ட் 4 அன்று வாங் தானாகச் சரணடைந்தார்.
சிங்கப்பூரில் தாம் சட்டபூர்வமாக தங்கி இருந்தற்கான எந்த ஒரு ஆவணத்தையும் அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை.
இதனை அடுத்து, அவர் கூடுதல் விசாரணைக்காக குடிநுழைவு, சோதனை சாவடி ஆணையத்திடம் (ICA) ஒப்படைக்கப்பட்டார்.
முன்னர், 2002ஆம் ஆண்டும் அவர் Overstay மூலம் 90 நாட்களுக்கு மேலாக தங்கி தண்டனை பெற்றவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட வாங் பின்னர் நாடு கடத்தப்பட்டார். அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு மீண்டும் விமானம் மூலம் அவர் சிங்கப்பூருக்கு வந்துள்ளார்.