நேபாள வெள்ளத்தில் மாயமான சிங்கப்பூர் பெண்: கடைசியாக நண்பருடன் பேசிய தகவல்

Published: 30 Aug 2026, 3:58 PM |

நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் கடந்த ஆக.26 அன்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிங்கப்பூரை சேர்ந்த மனிதநேய பணிகளை செய்துவந்த பெண்மணி ஒருவர் மாயமானதாக கூறப்பட்டுள்ளது.

சம்பவத்துக்கு ஒருநாள் முன்னர் (ஆக.25) தனது நேபாள நண்பருடன் தொலைபேசியில் பேசிய எஸ்டீ லோஹ் (Estee Loeh) என்ற அந்த பெண், தாம் நேபாள-சீன எல்லையில் இருப்பதாகவும், தனியாக பயணித்த அவர் நண்பர்களை சந்திக்க திட்டமிடுவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், அந்த வெள்ளத்துக்கு பிறகு எஸ்டீ-வை தொடர்புகொள்ள முடியவில்லை என்று நண்பர் கூறியுள்ளார். அவர் மாயமானது குறித்து நேபாள மற்றும் சிங்கப்பூர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சமூக சேவைகளில் ஈடுபட்டவர்

பிறருக்கு உதவும் மனம் கொண்ட அவர், நேபாளத்தில் பல சமூக சேவைகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, அங்குள்ள குழந்தைகள் நல காப்பகத்திற்கு பல முறை சென்றுள்ள எஸ்டீ, குழந்தைகளுக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கியுள்ளார். அதோடு S$637 நன்கொடையும் அவர் வழங்கியதாக சொல்லப்பட்டுள்ளது.

அவர் எப்போதும் பிறருக்கு உதவுவதில் முன்னணியில் நிற்பவர் என்றும் கூறப்படுகிறது. வெள்ளத்துக்கு பிறகு இதுவரை அவர் கிடைக்கவில்லை என்ற செய்தி அவரின் நண்பர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் 8 சிங்கப்பூரர்கள் காணவில்லை

எஸ்டீ லோஹ் தவிர்த்து மேலும் 8 சிங்கப்பூரர்களை இதுவரை காணவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை தேடும் பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது.

அவர்கள் குறித்த தகவல் கிடைத்தால் அப்டேட் செய்யப்படும். இணைப்பில் இருங்கள் சிங்கப்பூர் செய்திகள் உடன்…

Photos: Shin Min Daily News/ @BNOdesk/X

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.