சிங்கப்பூரில் 14 வயது சிறுமியை 23 நாட்களாக காணவில்லை.. பொதுமக்களிடம் உதவி கோரும் போலீஸ்

Published: 15 Aug 2026, 10:00 AM |
Missing girl serangoon nex mall

சிங்கப்பூரில் செராங்கூன் பகுதியில் காணாமல் போன 14 வயதான சாரா ஃபித்ரியானா பின்தே அப்துல்லா (Sarah Fitriyana Binte Abdullah) என்ற சிறுமி குறித்து காவல்துறையினர் தகவல் கோரி வருகின்றனர்.

சிறுமி, கடைசியாக ஜூலை 24ஆம் தேதி பிற்பகல் சுமார் 1.25 மணியளவில், 23 செராங்கூன் சென்ட்ரல் (NEX ஷாப்பிங் மால்) பகுதியில் காணப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடைசியாக அடர் ஊதா (purple) நிற மேலாடையும் வெளிர் நீல நிற (light blue) கீழாடையும் அணிந்த நிலையில் காணப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுமியை பற்றிய தகவல் அறிந்தால் 1800-255-0000 என்ற காவல்துறையின் அவசர உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணையதளத்திலும் தகவலைச் சமர்ப்பிக்கலாம்.

தகவல் கொடுத்தது யார் என யாருக்கும் தெரியாத அளவிற்கு அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என காவல்துறை உறுதி கூறியுள்ளது.

Photos: SPF & Google Photos

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.