ஜலான் பெசாரில் இறந்த நிலையில் கிடந்த ஊழியர் – போலீஸ் விசாரணை

Published: 11 Sep 2026, 9:07 AM |
Jalan Besar found death

ஜலான் பெசார் பகுதியில் 51 வயது மதிக்கத்தக்க ஊழியர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் அது குறித்து விசாரித்து வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

இந்த சம்பவம், 36 அப்பர் வெல்ட் சாலையில் கடந்த செப்.7 ஆம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து தகவலை பெற்ற காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர், அப்போது அங்குள்ள பென்ச்ஜ் ஒன்றில் ஊழியர் அசைவின்றி கிடந்தார் என சொல்லப்படுகிறது.

மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) துணை மருத்துவ குழுவினர் அவரை சோதித்தனர், ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததை அவர்கள் உறுதி செய்தனர்.

முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் சதிச்செயல் ஏதேனும் நடந்ததாக காவல்துறை சந்தேகிக்கவில்லை.

இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

4 ஆண்டுகளாக வேலை

உயிரிழந்த ஊழியர் அந்த பகுதியில் 4 ஆண்டுகளாக வேலை பார்த்து வருவதாக துப்புரவு ஊழியர் ஒருவர் கூறினார்.

செப். 6 அன்று ஊழியர் அங்குள்ள உலோகப் பெட்டி ஒன்றில் படுத்து உறங்குவதை அவர் பார்த்துள்ளார்.

அவர் மது அருந்திவிட்டு இருக்கிறார் என நினைத்ததாக துப்புரவு ஊழியர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தநாள், அதே பகுதியில் அவர் அசைவின்றி படுத்திருப்பதை கவனித்த துப்புரவு ஊழியர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக Shin Min Daily கூறியுள்ளது.

அவர் யார் என்ற முழு தகவலை காவல்துறை வெளியிடவில்லை.

விசாரணை தொடர்கிறது.

வெளிநாட்டு ஊழியர்கள், வேலை வாய்ப்பு தொடர்புடைய வீடியோக்களை மட்டும் காண சிங்கை தமிழ் Instagram பக்கத்தை பின்தொடருங்கள்..

Photo: Shin Min Daily News

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.