லிட்டில் இந்தியா கடையில் தொடரும் திருட்டு: “இனிமேல் இப்படி செய்யாதீர்கள்” – விரக்தியில் ஊழியர்

Published: 2 Sep 2026, 3:01 PM |
Little india seranggon road shop theft

லிட்டில் இந்தியா, சிராங்கூன் ரோட்டில் உள்ள கடை ஒன்றில் தொடர்ந்து திருட்டு ஏற்படுவதாக அக்கடையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் தன் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆக.27 அன்று சுமார் S$35 மதிப்புள்ள கடிகாரம் ஒன்று திருடப்பட்டது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார், இதனை Stomp செய்தியாக வெளியிட்டுள்ளது.

CCTV காட்சிகளின் அடிப்படையில், 3 பெண்கள் ஒன்றாக கடைக்கு வந்துள்ளனர், அதில் ஒரு பெண் மட்டும் கடிகாரத்தை எடுத்து பார்த்துக்கொண்டிருந்ததையும் பின்னர் அதை அங்கேயே வைத்ததையும் காண முடிந்தது.

அதன் பின்னர் மீண்டும் அங்கு வந்த பெண், கடிகாரத்தை எடுத்து செல்வது காணொளியில் தெரிகிறது. அதன் மதிப்பு S$35 என கூறப்பட்டுள்ளது.

மூவரும் திட்டமிட்டு இந்த திருட்டை செய்திருக்கலாம் என கடை ஊழியர் சந்தேகிக்கிறார். ஆனால் மற்ற 2 பெண்களின் அடையாளம் அதில் காணப்படவில்லை.

இது அந்த கடையின் முதல் திருட்டு அல்ல என்று அவர் கூறினார். இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் சுமார் S$64.90 மதிப்புள்ள மொத்தம் 6 கடிகாரங்களை ஒருவர் திருடி பேண்ட் பாக்கெட்டில் வைத்து சென்றதை CCTV வழியாக பார்த்ததாக அவர் கூறினார்.

பின்னர் 3 நாள்கள் கழித்து திருடியவர் கடைக்கு வந்தபோது சிக்கியதாகவும் அவரை போலீசார் பிடித்து சென்றதாகவும் ஊழியர் கூறியுள்ளார்.

தொடர்ந்து இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடப்பதை பார்க்கும் ஊழியர் மிகுந்த வெறுப்பிலும், கோபத்திலும் இருப்பதாக கூறினார்.

அந்த S$35 மதிப்புள்ள கடிகாரத்தை திருடியவர் குறித்து போலீசில் இதுவரை புகார் கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

CCTV காட்சியில் இருப்பவர்களை கண்டால் “இனிமேல் இப்படி செய்யாதீர்கள் என்று கூறுங்கள்” எனவும் அவர் வேண்டுகோள் வைத்தார்.

சட்டம்

சிங்கப்பூர் தண்டனைச் சட்டப் பிரிவு 379கீழ் திருட்டு ஓர் குற்றமாகும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

லிட்டில் இந்தியா தொடர்புடைய செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

Photo: Stomp website

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.