பொது இடத்தில் அநாகரிக செயல்.. வளைத்து பிடித்த பெண் – கைது செய்த போலீஸ்

Published: 17 Aug 2026, 4:35 PM |

சிங்கப்பூரில் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாக 59 வயது நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஓய்வு நேரத்தில் அலுவலகத்திற்கு வெளியே சென்ற Cheryl Goh என்ற பெண், அநாகரிகமான முறையில் தன்னுடைய உறுப்பை தொட்டுக்கொண்டு இருந்ததாகச் சொல்லப்படும் அந்த நபரை பார்த்துள்ளார்.

அது குறித்து Goh தட்டிக்கேட்டுள்ளார், ஆனால் அவர் தொடர்ந்து அவ்வாறு செய்ததாகவும் பின்னர் அங்கிருந்து சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே நபரை பார்த்த அந்த பெண், காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

அப்பர் கிராஸ் ஸ்ட்ரீட்டில் இருந்து கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலை சுமார் 4.40 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மோசமாக நடந்துகொண்ட அந்த நபரை கைது செய்தனர்.

Photo: xuerylg/Instagram

என்ன நடந்தது?

முதலில், அவர் சட்டையை உதறிவிட்டு வெப்பத்தைத் தணிப்பதாக Goh நினைத்ததாக தன்னுடைய Facebook பதிவில் கூறியுள்ளார்.

பின்னர், அவரின் சைகை தவறானது என்பதைப் புரிந்துகொண்ட Goh அவரிடம் சென்று தவறைத் தட்டிக்கேட்டார். ஆனால் அவர் அவ்வாறு செய்வதை நிறுத்தவில்லை, உடனே தன் கைபேசியை எடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் Goh.

அச்சமயமே, அந்த நபர் அங்கிருந்து சென்றதாகவும், 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் Hong Lim மார்க்கெட் அருகே உள்ள பாலத்தில் அவரை பார்த்ததாகவும் Goh கூறியுள்ளார்.

பின்னர், தனது சக ஊழியர்களுடன் அவரை தடுத்து நிறுத்தி காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாகவும் Goh குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், அந்த நபர் மன்னிப்பு கேட்டதாகவும், தான் மதுபோதையில் இருப்பதாகக் கூறியதாகவும் Goh அவர் பதிவில் கூறியுள்ளார்.

ஆனாலும், தொடர்ந்து பெண்ணின் உடல் குறித்து ஆபாசமாக பேசியதுடன், தகாத முறையில் பார்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் Goh தெரிவித்தார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.