சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை தேடிச்சென்று தொடர் இலவச உணவு வழங்கும் Seafood நிறுவனம் – குவியும் பாராட்டு

Published: 4 Sep 2026, 1:24 PM |
Free meals to foreign workers

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி கூறும் வகையில் இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது குறித்து இணைய வாசிகள் பாராட்டி வருகின்றனர்.

Catch என்ற கடல் உணவு (Seafood) நிறுவன ஊழியர் ஒருவர் சைக்கிளில் சென்று, வெளிப்புறத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த வெளிநாட்டு கட்டுமான ஊழியர்களுக்கு இலவச உணவுகளை வழங்கினார்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த அந்த இரு கட்டுமான ஊழியர்களிடமும் அவர் சிறிது நேரம் உரையாடி, அவர்களின் சிங்கப்பூர் வாழ்க்கை குறித்தும் கேட்டறிந்தார்.

அதில் ஒரு வெளிநாட்டு ஊழியர் கூறியதாவது; “சிங்கப்பூரில் வேலை நல்லா இருக்கு, சம்பளமும் ஓகே தான்.. எதிர்காலத்துல ஊருல கல்யாணம் பண்ணி குடும்ப வாழ்க்கைய தொடங்குவது தான் என் விருப்பம்” என்றார்.

அந்த கடல் உணவு நிறுவனம், இலவச உணவுகளை வழங்குவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆக. 25ஆம் தேதி இதே போன்ற வெளிநாட்டு ஊழியருக்கு இலவச உணவு வழங்கி தொடர் காணொளியை வெளியிட்டது.

அந்த காணொளியில் பங்களாதேஷ் ஊழியர் ஒருவர் பேசியிருப்பார். அதில் அவர் சிங்கப்பூரில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருவதாகவும், ஒன்று அல்லது இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை சொந்த நாடு சென்று குடும்பத்தை பார்த்து வருவதாகவும் சொன்னார்.

அதேபோல, சிங்கப்பூரில் வேலை கடினமாக இருந்தாலும் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை அவர் பாராட்டினார்.

மேலும், வேலை கடினம் என்றாலும் நல்ல சம்பளம் கிடைக்கிறது என்றும் அதனால்தான் சிங்கப்பூரை விரும்புவதாகவும் அவர் சொன்னார்.

சிங்கப்பூரை கட்டியெழுப்பும் பணியில் நேரடியாக ஈடுபடும் வெளிநாட்டு ஊழியர்களை சந்தித்து அவர்களுக்கு நன்றி கூறுவதே இதன் நோக்கம் என்று இலவச உணவு வழங்கி வரும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த செயலுக்கு சமூக ஊடக வாசிகள் பலர் நன்றி தெரிவித்து இந்த செயல் தொடர வேண்டும் என பாராட்டினர்.

அடுத்தமுறை, North-South Corridor பகுதியில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்க இருப்பதாக அந்நிறுவனம் சொன்னது.

வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்துகொள்ள வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.