சிங்கப்பூர் போலீசாரால் தேடப்பட்டு 24 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர் போலி பாஸ்போர்ட்டுடன் சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளார்.
2002 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த 58 வயதான Tan Khi Wie என்ற அவர், கடந்த மார்ச் மாதம் சாங்கி விமான நிலையம் வந்துள்ளார்.
அப்போது, போலியான பெயரில் இந்தோனேசிய பாஸ்போர்ட் வைத்திருந்த அவர் குடிநுழைவு சோதனையின்போது சிக்கினார்.
தானியங்கி குடிநுழைவு சோதனையை முடிக்க முடியாமல் திணறிய அவரை பிடித்த அதிகாரிகள் கூடுதலாக விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் சிங்கப்பூர் போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து தடுத்து வைக்கப்பட்ட அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சிங்கப்பூர் குடிநுழைவு சட்டத்தின்கீழ், நேற்று ஆக.11 அன்று அவருக்கு 11 மாதங்கள் மற்றும் 15 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது மற்றும் சட்டவிரோதமாக சிங்கப்பூரை விட்டு வெளியேறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என தீர்ப்பானது.
2002 இல் தப்பி ஓட்டம்
2002ஆம் ஆண்டில் மோசடி வழக்கு ஒன்றில் சிக்கிய அவருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.
தண்டனையை அனுபவிக்காமல் அவர் நாட்டை விட்டு படகு மூலமாக மலேசியா வழியாக தாய்லாந்து சென்று பின்னர் இந்தோனேசியா சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் 2011 முதல் 2016 வரை “Ken Srona” என்ற போலியான பெயரை கொண்ட பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு அவர் சிங்கப்பூருக்குள் பலதடவை வந்து சென்றுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது பிடிபட்ட அவர் 2002 இல் விதிக்கப்பட்ட சிறைத் 18 மாத சிறைத்தண்டனை முதலில் அனுபவிக்க வேண்டும் எனவும், பின்னர் தற்போது வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை தொடர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.