துவாஸில் பேருந்து, லாரி மற்றும் டிப்பர் லாரி ஆகியவை தொடர்புடைய விபத்தில் சிக்கிய 26 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
துவாஸ் சவுத் அவென்யூ 9-ல் நடந்த இந்த விபத்து குறித்து அன்று இரவு 7.30 மணிக்கு காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
பேருந்து, லாரி மற்றும் டிப்பர் லாரி ஆகியவை மோதிக்கொண்ட இந்த விபத்தில் சிக்கிய 45 வயதுமிக்க லாரி ஓட்டுநர், 25 முதல் 48 வயதுக்குட்பட்ட லாரியில் பயணித்த ஊழியர்கள் உட்பட 25 பேர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், 69 வயதுடைய டிப்பர் லாரி ஓட்டுநர் காவல்துறையின் விசாரணை வளையத்தில் உள்ளார்.
கிட்டத்தட்ட அதே நேரத்தில் தகவல்கிடைத்து SCDF வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கியவர்களில் 10 பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும், 8 பேர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும் மேலும் 8 பேர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக அது கூறியது.
டிக்டாக்கில் பதிவேற்றப்பட்ட விபத்துக்கு பிந்தைய காணொளிகளில் சாலை தடுப்புகளில் சீருடை அணிந்த ஊழியர்கள் அமர்ந்திருப்பதை காணமுடிந்தது.
மேலும், டிப்பர் லாரிக்கும் பேருந்துக்கு இடையே லாரி சிக்கி இருப்பதையும் அதில் காண முடிந்தது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.
முழு விவரம் அப்டேட் செய்யப்படும் தொடர்ந்து இணைப்பில் இருங்கள் சிங்கப்பூர் செய்திகள் உடன்…
வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்ற லாரிகள் மோதல்.. ஊழியர்களுக்கு காயம்