“சிங்கப்பூர், மலேசியா to திருச்சி” – தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விமான சேவைகள்!

Published: 5 Nov 2026, 2:02 PM |
Posted By: Editor
Scoot Flight

தீபாவளி பண்டிகை காலம் என்பதால் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு இருவழி சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

மேலும், மலேசியாவில் இருந்தும் திருச்சிக்கும் இருவழியில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவ.8 ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட சொந்த பகுதிக்கு மக்கள் அதிகமாக செல்வார்கள்.

இதன் காரணமாக விமான தேவைகளும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் Scoot மற்றும் ஏர் ஏசியா நிறுவனங்கள், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விமானங்களை இயக்குகின்றன.

சிங்கப்பூர் – திருச்சி

சிங்கப்பூர் – திருச்சி இடையே கடந்த நவ.3 ஆம் தேதி சிறப்பு விமானம் இயக்கப்பட்டது.

கூடுதலாக, சிங்கப்பூர் – திருச்சி இடையே இருவழி மார்க்கத்தில் வரும் நவ. 15 ஆம் தேதியும் சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வரும் நவ. 15 அன்று இரவு 11.40 அந்த விமானம் புறப்படும். பின்னர் அடுத்த நாள் (நவ.16) அதிகாலை 12.40-க்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படும்.

திருச்சி – கோலாலம்பூர்

ஏா் ஏசியா சார்பில் திருச்சி – கோலாலம்பூர் இடையே இருவழி மார்க்கத்திலும் நவ.6 முதல் நவ.12ஆம் தேதி வரை ஓர் சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளது.

அதன்மூலம், நவ.6 முதல் நவ.12ஆம் வரை திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு இரவு 10.30 மணிக்கு ஒரு விமானம், அதிகாலை 12.40 மணிக்கு ஒரு விமானம் என இரு சேவைகளை பெற முடியும்.

இதுபோன்ற விமானம் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள சிங்கை தமிழ் செய்தியுடன் இணைந்திருங்கள்..

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel