கட்டுமான நிறுவனத்திடம் 15 மணிநேரம் அமலாக்க சோதனை.. இருவர் கைது – 10 பேரிடம் விசாரணை

Published: 3 Nov 2026, 2:25 PM |
MOM Phantom workers

வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டை (quota) செயற்கையாக அதிகரிக்க போலி ஊழியர்களை (phantom workers) உருவாக்கியதாக சந்தேகிக்கப்படும் கட்டுமான நிறுவனத்திடம் சுமார் 15 மணிநேரம் அமலாக்க சோதனை நடவடிக்கையை மனிதவள அமைச்சகம் (MOM) மேற்கொண்டது.

இந்த சோதனை நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் 10 பேரிடம் விசாரணை நடப்பதாகவும் MOM தனது ஃபேஸ்புக் பதிவில் நேற்று முன்தினம் (நவ.1) குறிப்பிட்டது.

விசாரணை வளையத்தில் உள்ளவர்களில் 6 பேர் போலி ஊழியர்கள் என்றும் சந்தேகிக்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.

இதில் நிறுவனத்தின் உயர் நிர்வாகிகளிடமும் கூடுதல் விசாரணைகள் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பதிவேடுகளை ஆய்வு செய்த அமைச்சு ஆதாரங்களை திரட்டியதாக கூறியுள்ளது.

மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

கடும் எச்சரிக்கை

மோசடியாக வேலை அனுமதி விண்ணப்பங்களில் தவறான தகவல்களை கொடுத்தது நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக S$20,000 வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிறுவனம் அல்லது நபர்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க தடை விதிக்கப்படலாம்.

போலி CPF பங்களிப்புகளுக்காக வேண்டி தங்கள் தனிப்பட்ட விவரங்களை நிறுவங்களுக்கு கொடுக்கும் தனிநபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ், வேலை அனுமதி மோசடி கடுமையான குற்றமாக கருதப்படும் என்று MOM எச்சரித்துள்ளது.

போலி ஊழியர்கள்

நிறுவனம் தங்களிடம் உண்மையாகவே வேலை செய்யாத உள்ளூர் ஊழியர்களை கணக்கு காட்டி அவர்களின் பெயரில் CPF சேமநிதி பங்களிப்புகளை செலுத்துவது போலி ஊழியர்கள் (Phantom Worker) என்று சொல்லப்படும்.

இவ்வாறு உள்ளூர் ஊழியர்களை அதிகமாக கணக்கு காட்டும் நிறுவனம், வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒதுக்கீட்டை (Foreign worker quota) அதிகரிக்க முயற்சி செய்கிறது.

அவ்வாறு போலியாக அதிகரிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டை வைத்து, கூடுதலாக ஒர்க் பாஸ் அனுமதிகளை விண்ணப்பித்து வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டுக்குள் அழைத்துவரப்படுகின்றனர்.

சிங்கப்பூருக்கு போலியாக வேலைக்கு எடுக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் – MOM எச்சரிக்கை

“சொன்ன வேலை ஒன்று செய்வது ஒன்று” – 270 வெளிநாட்டு ஊழியர்கள் விதிமீறல்? – 45 நிறுவனங்களிடம் விசாரணை

MOM தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள “சிங்கப்பூர் செய்திகள்” உடன் இணைப்பில் இருங்கள்..

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.