சிங்கப்பூரில் நள்ளிரவு நேரத்தில் வாடகை வாகனம் ஏதும் புக் செய்யமுடியாமல் சுமார் 30 நிமிடங்களாக தவித்த 2 பெண்களுக்கு இந்திய ஊழியர் லாரியில் லிப்ட் கொடுத்து உதவியது சிங்கப்பூரர் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
“சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பெரிய மனம் உண்டு என்பதை இந்த காணொளி உண்மையில் காட்கிறது” என்ற தலைப்புடன் வெளியான இந்த காணொளி Cafeswithrich என்ற டிக்டாக் பயனர் நேற்று (நவ.1) பகிர்ந்தார்.
வாடகை வாகனம் இல்லை
நள்ளிரவு நேரம் மற்றும் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் இடம் என்பதால் வாடகை வாகனம் ஏதும் புக் செய்ய இயலவில்லை என்று 2 தோழிகளும் கூறியுள்ளனர்.
மேலும், சிங்கப்பூரர்கள் சிலரிடம் “அருகில் மக்கள் இருக்கும் இடங்களில் விட்டுவிடுங்கள்” என லிப்ட் கேட்டும் எந்த பயனும் இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிறகு என்ன செய்வது என்றறியாமல் நின்றிருந்த அவர்கள் இருவரும் இந்திய ஊழியரை கண்டனர். லாரியில் புறப்படத் தயாராக இருந்த அவரிடம் சென்று “எங்களை போக்குவரத்து கிடைக்கும் இடத்தில் இறக்கிவிட முடியுமா?” என்று தோழிகள் கேட்க, சற்றே தயக்கமின்றி ஊழியர் ஒப்புக்கொண்டதாகவும் அவர்கள் கூறினர்.
பின்னர், இருவரும் லாரியின் பின்புறத்தில் ஏறிக்கொண்டு பயணித்தனர்.
ஊழியருடன் உரையாடல்
ஊழியருக்கு அதிகாலை 3 மணிக்கு வேலை அட்டவணை, எனவே ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் அவர் உறக்கத்தில் இருந்ததாக அவர்கள் கூறினர்.
8 மணிநேரம் வேலை முடிந்தால் தான் அவருக்கு வார விடுமுறை கிடைக்கும் என ஊழியர் கூறியுள்ளார்.
1 வாரத்தில் இந்தியா செல்லயிருப்பதால், தன் குடும்பத்தை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக ஊழியர் கூறியுள்ளார்.
இருப்பினும், மீண்டும் வேலைக்கு திரும்பும் வலியை வார்த்தையால் விவரிக்க முடியாது என்றும் ஊழியர் வேதனையுடன் கூறியுள்ளார்.
இணையவாசிகள் கருத்து
இணையத்தில் தீயாக பரவிய இந்த காணொளியை பலர் பாராட்டி கருத்து தெரிவித்தனர்.
பலர் ஊழியரின் கருணை உள்ளதை பாராட்டினர். சிலர் ஊழியருக்கு பணம் கொடுத்திருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர்.
அவரின் நேரத்துக்கும் உழைப்புக்கும் ஏதாவது கொடுத்திருக்க வேண்டும் என சிலர் கருத்துக்களை கூறினர்.
வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்புடைய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள் சிங்கப்பூர் செய்திகள் உடன்…
PHOTO: CAFESWITHRICH/TIKTOK