குழந்தைகளை துன்புறுத்தி, தவறான காணொளி எடுத்து அனுப்பியதாக வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சிறை

Published: 31 Oct 2026, 1:50 PM |
Court singapore

சிங்கப்பூரில் தான் வேலை செய்த வீட்டு குழந்தைகளை துன்புறுத்தி, தவறாக படமெடுத்த குற்றத்திற்காக 29 வயதுமிக்க வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு நேற்று (அக். 30) 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 4 வயதான குழந்தையை 23 முறை குத்தி துன்புறுத்தி தலையில் உதைத்து கீழே தள்ளிவிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

1 வயதான குழந்தையின் முகத்தில் தண்ணீரை பீச்சியடித்தும் அந்த பணிப்பெண் துன்புறுத்தியுள்ளார்.

மேலும், 7 வயதுமிக்க பெண் பிள்ளை உட்பட 3 குழந்தைகளையும் தவறாக காணொளி எடுத்து இந்தோனேசியாவில் உள்ள தனது கணவருக்கு அவர் அனுப்பியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அவர் ஜனவரி மாதம் வேலைக்கு சேர்ந்தார் என்றும், இந்த துன்புறுத்தல் சம்பவங்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடந்தது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சம்பவம் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது?

குழந்தையின் தந்தை அவரின் கைபேசியை ஆராய்ச்சி செய்தபோது அந்த காணொளிகள் அதில் இருப்பதை கண்டு உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பின்னர், மார்ச் 14 ஆம் தேதி அன்று பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.

குற்றச்சாட்டுகள்

குழந்தைகளை துன்புறுத்தியதாக 2 குற்றச்சாட்டுகளும், அதை காணொளி எடுத்து ஆபாசமான முறையில் மின்னணு சாதனம் வழியாக அனுப்பியதாக 1 குற்றச்சாட்டும் அவர் மீது சொல்லப்பட்டுள்ளது.

மேலும் 6 குற்றச்சாட்டுகள் தண்டனையின்போது கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

அந்த காணொளி பாலியல் இன்பத்துக்காக எடுக்கப்பட்டவை அல்ல என்றாலும் அவற்றை மற்றவர்களுக்கும் அனுப்பி இருக்கலாம் என்ற வாதத்தை அரசு தரப்பு முன் வைத்தது.

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.