சிங்கப்பூருக்கு சுற்றுலா வந்த பயணி கண்ட விசித்திர சம்பவம்.. “கைமாறும் பணம்” “நேர்மையற்ற பரிமாற்றம்” – நெட்டிசன்கள் ஊகம்

Published: 12 Oct 2026, 3:11 PM |
tourist-spots-dodgy-transaction-rubbish-bin-jalan-besar

சிங்கப்பூருக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நபர், ஜலான் புசார் பகுதியில் நேர்மையற்ற முறையில் நடக்கும் பரிமாற்றம் குறித்து வெளியிட்ட காணொளி பலதரப்பட்ட கருத்துக்களை பெற்றுவருகிறது.

@rkbackpacking என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் தன் மனைவியுடன் சேர்ந்து பயண காணொளி வெளியிடும் ரியன் என்ற நபர் சிங்கப்பூருக்கு சுற்றுலா வந்துள்ளார்.

ஜலான் புசார் பகுதியில் நடந்த விசித்திரமான சம்பவத்தை அவர் படம்பிடித்து வெளியிட்டுள்ளார், “இங்கு என்ன நடக்கிறது?” என்று பலர் கேட்க “உங்களுக்கு தேவையில்லாத வேலை” என்று சிலர் கருத்துக்களை கூறினர்.

என்ன நடந்தது?

ரியன் கூறியதாவது; அப்பகுதியில் பெண் ஒருவர் ஆடவரிடம் ரகசியமாக பணத்தை கொடுத்ததாகவும், பின்னர் அந்த ஆடவர் இன்னொரு ஆடவரிடம் சந்தேகத்திற்குரிய முறையில் பணத்தை கைமாற்றியதாகவும் விளக்கினார்.

அதன் பின்னர், இரண்டாம் ஆடவர் உடனே குப்பை தொட்டியை திறந்து ஏதோ சிகப்பு நிற சிறிய பையை வெளியே எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட காணொளியில், பெண் பணம் கொடுப்பதும் ஆடவர் ஒருவர் குப்பை தொட்டியை திறப்பதும் மட்டுமே பதிவாகியுள்ளது. ஆடவர்களிடையேயான பணம் பரிமாற்றம் மற்றும் சிவப்பு நிற பையை எடுத்த காட்சிகளை அவர் வெளியிடவில்லை.

குப்பை தொட்டியில் என்னதான் இருக்கு என்று அருகே சென்று எட்டிப்பார்த்த ரியனை அனைவரும் கடுமையாக முறைத்து பார்த்ததாக கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் 3 நாட்கள் இருந்ததாக கூறிய ரியன், சட்டதிட்டங்கள் கடுமையாக உள்ள நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக சொன்னார், இருந்தாலும் பயணத்தை மிகவும் ரசித்ததாகவும் அவர் விளக்கினார்.

ஊகங்களும் கருத்துகளும்..

ரியனின் பதிவுக்கு பலவகையான கருத்துக்களை இணையவாசிகள் கூறிவருகின்றனர்.

அதில், அது சட்டவிரோத சிகரெட்டாக இருக்கலாம் என்று பாதிக்கும் மேற்பட்டோர் கருத்து கூறினர், ஏனெனில் கடையில் விற்பதை விட இது 60 சதவீதம் குறைவு என்று அவர்கள் விளக்கினர்.

சிலர், அது தடைசெய்யப்பட்ட வேப் கருவிகளாக இருக்கலாம் என்றும் ஊகித்தனர்.

இந்தியாவில் இருந்து வரும் “ஹான்ஸ்” என்று சிலர் ஊகித்தனர். ஏனெனில் ஹான்ஸ் சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட ஒன்று என அவர்கள் கூறினர்.

இவ்வாறு பல்வேறு கருத்துகள், ஊகங்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், இந்த செய்தியை வெளியிட்ட Stomp செய்தி நிறுவனம் கருத்துக்காக வேண்டி காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

சிங்கப்பூர் செய்திகள், வெளிநாட்டு ஊழியர் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைப்பில் இருங்கள்…

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.