குயின் ஸ்ட்ரீட் பேருந்து முனையத்தில் விபத்து: 30 வயதுமிக்க பெண் மரணம் – பேருந்து ஓட்டுநர் கைது

Published: 7 Oct 2026, 1:18 PM |
குயின் ஸ்ட்ரீட் பேருந்து முனையத்தில் விபத்து: 30 வயதுமிக்க பெண் மரணம் - பேருந்து ஓட்டுநர் கைது

குயின் ஸ்ட்ரீட் பேருந்து முனையத்தில் நேற்று (அக்டோபர் 6) ஏற்பட்ட பேருந்து தொடர்புடைய விபத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்தார், இதனை அடுத்து 30 வயதுமிக்க பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

குயின் ஸ்ட்ரீட் மற்றும் அரப் ஸ்ட்ரீட் சந்திப்பில் நடந்த இந்த சம்பவம் குறித்து நேற்று (அக்.6) மாலை 7 மணிக்கு சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கும் (SCDF) காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

விரைந்து சென்ற மீட்பு படையினர், பேருந்தின் அடியில் ஒருவர் சிக்கி இருப்பதை கண்டு, மீட்பு கருவிகளை பயன்படுத்தி அவரை வெளியே மீட்டு கொண்டு வந்தனர்.

பின்னர் சோதித்தில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததை SCDF துணை மருத்துவ குழுவினர் உறுதிப்படுத்தி கூறினர். இறந்தவர் 30 வயதுமிக்க பெண் என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

கைது

இந்நிலையில், கவன குறைவாக பேருந்தை இயக்கி பெண்ணின் உயிரை பறித்த குற்றச்சாட்டில் 32 வயதுமிக்க பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தின் காரணமாக அங்கு பேருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டன. நேற்று இரவு 9:19 மணிக்கு, குயின் ஸ்ட்ரீட் முனையத்திலிருந்து 170 எண் பேருந்து இயங்காது என்று SBS ட்ரான்சிட் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

தமிழ் மக்களுக்கான சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கும் சிங்கை தமிழ் தளத்துடன் இணைந்திருங்கள்…

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.