சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் பேருந்துக்குள் ஊழியர்கள் மோதலில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி கடந்த செப்.13 அன்று Facebook சமூக ஊடகத்தில் வெளியாகி வைரலானது.
அதில் வாடகை ஒப்பந்த பேரூந்து உள்ளேயும் வெளியேயும் சில ஊழியர்கள் தள்ளுமுல்லு செய்து சண்டையிடும் காட்சிகளை காண முடிந்தது.
பேருந்தின் CCTV கேமராவில் பதிவான இந்த காணொளியில், பேருந்து ஓட்டுநரின் முகத்தை ஒருவர் பிடித்து இழுப்பதும் பதிவாகியுள்ளது.
என்ன நடந்தது?
இது குறித்து விவரித்த சாய் ஷி ஃபெங் (40) என்ற பேருந்து ஓட்டுநர், நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றிற்காக ஜூரோங் பெஞ்சுரு தங்கும் விடுதிக்கும் (Jurong Penjuru Dormitory) உட்லேண்ட்ஸ் லிங்க்கிற்கும் (Woodlands Link) இடையே ஊழியர்களை அழைத்து செல்லும் பணியை மேற்கொண்டதாக கூறினார்.
காலை 10 மணிக்கு நல்ல முறையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் உட்லேண்ட்ஸ் லிங்குக்கு பயணத்தை முடித்த ஓட்டுநர், மாலை நேரத்தில் ஊழியர்களை திரும்ப விடுதிக்கு அழைத்துவரும்போது பிரச்சனை ஏற்பட்டதாக விவரித்துள்ளார்.
அதாவது மாலை 4 மணியளவில் தங்கும் விடுதி திரும்பிய ஊழியர்கள் சிலர் குடிபோதையில் இருந்ததாகவும், பேருந்தில் மேற்பார்வையாளர் யாரும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வாக்குவாதமும் சண்டையும்
பின்னர் பேருந்து புறப்பட்ட சிறுது நேரத்தில் ஊழியர்களிடையே வாக்குவாதம் மூண்டதாகவும், அது சண்டையாக மாறியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த சண்டையால் பேருந்தை பாதுகாப்பாக ஓட்ட முடியவில்லை என்று கூறிய ஓட்டுநர், “சண்டையை நிறுத்துங்கள்” என கூறினார், ஆனால் “யாரும் அதை காதில் வாங்கவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் அடங்காத ஊழியர்கள் தள்ளுமுள்ளில் ஈடுபட்டு சத்தம் போட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அதில் ஊழியர் ஒருவர் மற்றொருவரை அமைதிப்படுத்த முயல்வதையும் காண முடிகிறது.
ஓட்டுநர் தலையீடு
இதனால் பேருந்தை ஓரமாக நிறுத்திய ஓட்டுநர் சாய், ஊழியர்களை கீழே இறங்குமாறு கூறினார்.
அப்போது சில ஊழியர்கள் தன்னை இழுத்து, தள்ளி தொடர்ந்து பேருந்தை ஓட்ட வேண்டும் என கட்டாயப்படுத்த முயன்றதாக அவர் தெரிவித்தார்.
காவல்துறை அழைப்பு
இது முடியாது என கருதிய ஓட்டுநர் காவல்துறையை அழைத்தார்.
பின்னர் காவல்துறை அங்கு வந்தது. அப்போதும் பேருந்து உள்ளேயும் வெளியேயும் ஊழியர்கள் தள்ளுமுள்ளு செய்து கொண்டிருந்ததாக ஓட்டுநர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் விசாரணை மேற்கொண்ட காவல்துறை, ஓட்டுநரை சோதித்து பேருந்தை எடுத்து செல்ல அனுமதி அளித்தது.
அச்சத்தில் உறைந்த ஓட்டுநர்
இந்த சம்பவத்தில் ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும், அவரின் உடலில் வலி ஏற்பட்டதாக சொன்னார். மேலும் அவரின் மனநிலையும் பாதிக்கப்பட்டதாக கூறிய ஓட்டுநர் “இன்னும் அந்த பயம் நீங்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
நடந்த மோதல் காட்சிகள் அவரின் கண்முன்னே வந்து வந்து செல்வதால் கவனத்துடன் வாகனத்தை ஓட்ட முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
வீடியோ வெளியான நோக்கம்?
மேலும் சம்மந்தப்பட்ட ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது தான் நோக்கம் என கூறிய சிங்கப்பூர் பஸ் சார்ட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் ஜிதேஷ் தில்லான், வழக்கு தொடுக்கவோ அல்லது இழப்பீடு கேட்பதோ எங்களின் நோக்கம் இல்லை என்று திட்டவட்டடமாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலை?
காவல்துறை இந்த சம்பவத்தை கையாண்டு வருகிறது.
யார் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டதாகவோ அல்லது வேறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ எந்த தகவலும் வெளியாகவில்லை.
சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் படிக்க இணைப்பில் இருங்கள்…