“இந்திய சமூகத்துக்கு எதிரான இனவாத, வெறுப்புணர்வு கருத்துக்கள் மிகவும் கவலைக்குரியது” – மூத்த அமைச்சர் லீ

Published: 6 Sep 2026, 2:35 PM |
SM Lee Hsien Loong

நேபாள வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து இந்திய சமூகத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் இனவாத மற்றும் வெறுப்புணர்வு கருத்துக்கள் மிகவும் கவலையளிப்பதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் இன நல்லிணக்கத்தையும் பரஸ்பர மரியாதையையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை பற்றியும் அவர் பேசினார்.

நேபாள பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த திரு.லீ, இதுபோன்ற “துயரமான நேரங்களில் நாம் கருணையையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இனம், மொழி, மதம் ஆகியவை கடந்து ஒருவருக்கொருவர் துணையாக நிற்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

ஏர் இந்தியா விவாதம்

ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மேற்கொண்ட முதலீடு குறித்த விவாதங்கள் பற்றியும் திரு. லீ பேசினார்.

இது போன்ற பொது விவாத விவகாரங்கள், இந்தியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் திரித்து மாற்றப்படுவதும் அதே போன்ற மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.

இந்தியர்களுக்கு எதிரான இதுபோன்ற இனவாத கருத்துகள் குறித்து காவல்துறை விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டதாக மூத்த அமைச்சர் கா. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.