யுஷுன் டேம் (Yishun Dam) தண்ணீரில் 30 வயதுமிக்க ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து நேற்று செப்டம்பர் 2ஆம் தேதி அன்று காலை 7.20 மணிக்கு யுஷுன் அவன்யூ 1 இலிருந்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததை அடுத்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினரும் (SCDF) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர், SCDF வீரர்கள் சிறப்பு மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி ஆடவரின் உடலை நீரிலிருந்து மீட்டனர்.
இதனை அடுத்து, ஆடவரை சோதித்த SCDF துணை மருத்துவர்கள், அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததை உறுதி செய்தனர்.
இதில் சதிச்செயல் ஏதும் நடந்ததாக காவல்துறை சந்தேகிக்கவில்லை என கூறியுள்ளனர்.
எனினும், இந்த சம்பவம் தொடர்பான காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கூடுதல் விவரங்களை அறிய இணைப்பில் இருங்கள் சிங்கப்பூர் செய்திகள் உடன்..
Photos: CY Leong/Google Maps, Fitrah Syah/Facebook