சாங்கி விமான நிலையத்தில் குடிபோதையில் ரகளை.. Anti-Hijack Button அழுத்தப்பட்டதால் பரபரப்பு – பிரிட்டிஷ் ஆடவருக்கு சிறை

Published: 3 Sep 2026, 1:55 PM |
Changi airport Scoot flight

சாங்கி விமான நிலையத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு ஸ்கூட் விமானத்தில் வலுக்கட்டாயமாக ஏற முயன்ற பிரிட்டிஷ் ஆடவருக்கு, நேற்று (ஆக.2) 8 வாரங்கள் சிறைத் தண்டனையும் S$2,800 அபராதமும் விதிக்கப்பட்டது.

லிட்டில் இந்தியாவில் தங்கி இருந்தார்

25 வயதுமிக்க அருட்செல்வன் கர்ணன் என்ற அந்த ஆடவர் கடந்த ஜூலை 19 அன்று ஆஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் வந்துள்ளார், அதன் பின்னர் லிட்டில் இந்தியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அடுத்தநாள், 700ml மதுவை அருந்திவிட்டு சாங்கி விமான நிலையம் முனையம் ஒன்றுக்கு (Terminal 1) சென்றுள்ளார் அருட்செல்வன்.

விமான நிலையத்தில் அடாவடி

அவர் குடிபோதையில் Gate C17 பகுதிக்கு அருகே அமர்ந்து சத்தம் போட்டதாகவும், இதனால் தொந்தரவு அடைந்த மற்ற பயணிகள் ஸ்கூட் விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

பின்னர் அவரை ஸ்கூட் விமான ஊழியர் அணுகியபோது, அவர் தகாத வார்த்தைகளால் பேசியதாக சொல்லப்பட்டுள்ளது.

மலேசியா செல்லவிருந்த அந்த ஸ்கூட் விமானத்தில் அவர் பயணிக்க இருந்தார், இந்நிலையில் அவர் செய்த ரகலையால் அவருக்கு பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

அழுத்தப்பட்ட anti-hijack பொத்தான்

அவருக்கு தடைகள் அமைக்கப்பட்டதாகவும் அதையெல்லாம் தாண்டி சென்ற அருட்செல்வன், விமான ஊழியரை தள்ளிவிட்டு இணைப்பு பாலம் வழியாக விமானத்தை நோக்கி சென்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஊழியர் உடனடியாக அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் தகவல் கொடுக்க, விமானத்தின் anti-hijack பட்டன் எனும் கடத்தல் தடுப்பு பொத்தான் அழுத்தப்பட்டது.

இதனால் விமான anti-hijack கதவு மூடப்பட்டதுடன், அருட்செல்வன் விமானத்துக்குள் செல்லமுடியாமல் போனது.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

MOM, ICA அறிவிப்புகள், வேலை வாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் துல்லியமாக தெரிந்து கொள்ள - Follow the Singai Tamil Channel on WhatsApp

Join WhatsApp Channel
Photo of author

சிங்கப்பூர் செய்திகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் குறித்த தகவல்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வரும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் இவர். இதற்கு முன்னர் தமிழ் மைக் செட் சிங்கப்பூர் மற்றும் தமிழ் டெய்லி சிங்கப்பூர் ஆகிய ஊடகங்களில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அனுமதிகள் உள்ளிட்டவை குறித்த அரசின் அதிகாரப்பூர்வ செய்திகளை ஆழமாக ஆராய்ந்து துல்லியமாக உள்ளது உள்ளபடி எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.