சிங்கப்பூரில் 11 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்த 63 வயதான சமையல்காரருக்கு 8 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காஸ்சிம் ஜுஹாமத் என்ற அந்த மூத்த சமையல்காரர், உணவகத்தில் வைத்தே அந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக சொல்லப்பட்டுள்ளது.
சம்பத்தின்போது வாடிக்கையாளர்களும் சக ஊழியர்களும் உணவகத்தில் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி நடந்த இந்த குற்றத்தை காஸ்சிம் ஒப்புக்கொண்டார்.
பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்துகொண்ட ஒரு குற்றச்சாட்டும், மேலும் மானபங்கம் செய்தது உள்ளிட்ட இரு குற்றச்சாட்டுகள் என மொத்தம் 3 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது நீதிமன்றத்தால் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
உணவக மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ளார் என்பது கூடுதல் தகவல்.
அவர் 50 வயது நிரம்பியவர் என்பதால் அவருக்கு பிரம்படி தண்டனை விதிக்க முடியாது.
Image: AFP