புக்கிட் தீமா பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட 57 வயதுமிக்க நபர் ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (ஆக.23) இரவு 7:45 மணியளவில், Wayang Satu Flyover அருகே ரோச்சர் கால்வாயில் ஒருவர் மயங்கிய நிலையில் மிதப்பதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு (SCDF) தகவல் வந்தது.
பின்னர், சம்பவ நடந்த இடத்துக்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் ஏணியை பயன்படுத்தி கால்வாயில் இறங்கி அந்த நபரை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
இதனை அடுத்து, அவர் உடனடியாக டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தித் தெரிவித்தது.
ஆரம்பகட்ட விசாரணையில் சதிச்செயல் ஏதும் நடந்ததாக காவல்துறை சந்தேகிக்கவில்லை.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அவர் யார் என்பது குறித்த விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை.