சிங்கப்பூரின் முக்கிய பகுதியில் இன்று (ஆக.23) முதல் 25 வரை சாலை பணிகள் நடைபெறுவதால் 15 பேருந்து சேவைகள் பாதிக்கப்படும் என்று நில போக்குவரத்து ஆணையம் (LTA) கூறியுள்ளது.
சாலை பணிகள் நடைபெறும் அந்த நாட்களில் சில பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்காமல் செல்லும் என்பதையும் LTA அறிவுறுத்தியுள்ளது.
இதனால் பாதிக்கப்படும் 8 சாலைகள்
- பேஃபிரண்ட் அவென்யூ (Bayfront Avenue)
- பீச் ரோடு (Beach Road)
- சென்ட்ரல் புல்வார்டு (Central Boulevard)
- மரினா புல்வார்டு (Marina Boulevard)
- ராஃபிள்ஸ் அவென்யூ (Raffles Avenue)
- ராஃபிள்ஸ் புல்வார்டு (Raffles Boulevard)
- தெமாசிக் அவென்யூ (Temasek Avenue)
- தெமாசிக் புல்வார்டு (Temasek Boulevard)
இந்த சாலைகளில் குறிப்பாக அதிகம் பாதிக்கப்படுவது, “ராஃபிள்ஸ் அவென்யூ” மற்றும் “தெமாசிக் அவென்யூ” ஆகியவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதில் பாதிக்கப்படும் SBS, SMRT மற்றும் Go-Ahead Singapore பேருந்துகளின் எண்கள்: 56, 70M, 111, 133, 196, 502, 960, 960e, 961M, 36, 518, 77, 97, 106 மற்றும் 857.
இந்த மாற்றங்கள், இன்று இரவு 10 மணி முதல் கடைசி பேருந்து சேவை வரை நடப்பில் இருக்கும்.
மேலும் நாளை (ஆக.24) மற்றும் நாளை மறுநாள் (ஆக.25) இரவு 11 மணி முதல் கடைசி பேருந்து சேவை வரை நடப்பில் இருக்கும்.
பயணிகள் தங்கள் பயண திட்டமிடலை முன்கூட்டியே சரிசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Photo: Pinterest