சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்ற இரண்டு லாரிகள் மற்றும் ஒரு தனியார் கார் மோதிய சம்பவத்தில் பலர் காயமடைந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
பான்-தீவு விரைவுச்சாலையில் (PIE) நேற்று ஆகஸ்ட் 16 அன்று காலை வேளையில் இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் சிக்கிய அனைவருக்கும் சம்பவ இடத்திலேயே உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டதையும் புகைப்படங்கள் வாயிலாக காணமுடிகிறது.
மேலும் விவரங்கள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும். இணைப்பில் இருங்கள்.
வெளிநாட்டு ஊழியர்கள் ஏற்றிச்செல்லும் லாரி மற்றும் கனரக வாகனங்கள் அருகே செல்லும்போது பாதுகாப்பான வேகவரம்பை பின்பற்றுங்கள்.
அதே போல, முன்னால் செல்லும் வாகனத்துடன் போதிய இடைவெளியை பின்பற்றுவது திடீர் விபத்துகளை தவிர்க்கும்.
Photos: Facebook