சிங்கப்பூரின் மரினா பிரிட்ஜ் (Marina Bridge) மற்றும் Crest கேட்ஸ் ஆகியவை பராமரிப்புப் பணிகள் காரணமாக 4 நாட்களுக்கு மூடப்பட உள்ளதாக தேசிய நீர் அமைப்பு (PUB) தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் (ஆக.17) முதல் ஆக.20ஆம் தேதி வரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 11.30 மணி வரை மரினா பிரிட்ஜ் மூடப்பட்டிருக்கும், அப்போது பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், பாலத்தைப் பயன்படுத்தும் பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் மட்டும் அனுமதி வழங்கப்படும்.
அந்த குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் அது கூறியுள்ளது.
மூடல் நாட்களில் பாலம் தற்காலிகமாக திறக்கப்படும் நேர இடைவெளிகள்
- காலை 10.50 முதல் 11 மணி வரை
- மதியம் 12 மணி முதல் 1 வரை
- பிற்பகல் 3 முதல் 3.10 வரை
- மாலை 5 முதல் 5.10 வரை
- மாலை 6 முதல் 6.20 வரை
- மாலை 7 முதல் 7.10 வரை
- இரவு 8 முதல் 8.10 வரை
- இரவு 9 முதல் 9.10 வரை
- இரவு 10 முதல் 10.10 வரை
- இரவு 11.30 முதல் மறுநாள் காலை 9 மணி வரை
இது குறித்த கூடுதல் தகவல் அறிய 6514-5959 என்ற எண்ணில் Marina Barrage தகவல் நிலையத்தை தொடர்புகொள்ளலாம்.
Image: Google Maps